/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிரிக்கெட் லீக்: நல்லாம்பட்டி யங்ஸ்டார் அணி வெற்றி
/
கிரிக்கெட் லீக்: நல்லாம்பட்டி யங்ஸ்டார் அணி வெற்றி
கிரிக்கெட் லீக்: நல்லாம்பட்டி யங்ஸ்டார் அணி வெற்றி
கிரிக்கெட் லீக்: நல்லாம்பட்டி யங்ஸ்டார் அணி வெற்றி
ADDED : பிப் 13, 2024 05:16 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடந்த மாவட்ட அளவிலான லீக் போட்டியில் நல்லாம்பட்டி யங்ஸ்டார் அணி வெற்றி பெற்றது.:
பி.எஸ்.என்.ஏ.மைதானத்தில் நடந்த பிரசித்தி வித்யோதயா கோப்பைக்கான 2வது டிவிஷன் லீக் போட்டியில் திண்டுக்கல்ஆரஞ்சு ஷர்ட்ஸ் சி.சி. அணி 25.3 ஓவரில் 111 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. கணேஷ் 35ரன்கள்,ரூபன், ரமேஷ்குமார் தலா 3 விக்கெட் எடுத்தனர்.
சேசிங் செய்த திண்டுக்கல் சாமியார்தோட்டம் சி.சி.அணி 21.1ஓவரில் 108ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது.
நவநீதகிருஷ்ணன் 56 ரன்கள், பனுவலட்டி, கோபிநாத் தலா 3விக்கெட் எடுத்தனர். பி.எஸ்.என்.ஏ. மைதானத்தில் நடந்த பிரசித்தி வித்யோதயா கோப்பைக்கான 2வது டிவிஷன் லீக்போட்டியில்திண்டுக்கல் ஆர்.வி.எஸ். ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 25 ஓவரில் 7 விக்கெட் இழந்து 133ரன்கள் எடுத்தது. அகின் 31,ஹரிகிருஷ்ணன் 34ரன்கள் எடுத்தனர்.
சேசிங் செய்த பாப்பம்பட்டி எய்ம்ஸ்டார் சி.சி. அணி 25 ஓவரில் 8 விக்கெட்இழந்து 129ரன்கள் மட்டுமே எடுத்தது. நிவாஸ் 37 ரன்கள் எடுத்தார். ஸ்ரீ.வி.கல்லுாரி மைதானத்தில் நடந்த ஓட்டல் பார்சன்ஸ் கோர்ட் கோப்பைக்கான 3வது டிவிஷன் லீக்போட்டியில் திண்டுக்கல்மன்சூர் சி.சி.அணி 25 ஓவரில் 155ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது.
பூபதிராஜா 51, பிரவீன்4, வெங்கடேசன் 3 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த திண்டுக்கல் காட்சன் சி.சி.அணி 21.5 ஓவரில் 116ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது.
சுந்தர் 31, அஸ்வதாமன் 4 விக்கெட் எடுத்தனர். ஸ்ரீ.வி.கல்லூரி மைதானத்தில் நடந்த ஓட்டல் பார்சன்ஸ் கோர்ட் கோப்பைக்கான 3வது டிவிஷன் லீக் போட்டியில் நிலக்கோட்டை வாரியர்ஸ் சி.சி. அணி 25 ஓவரில் 6 விக்கெட் இழந்து 172ரன்கள் எடுத்தது.
கருப்பையா55, லோகுமணி 33, பிரபாகரன் 33ரன்கள், கணேஷ்குமார் 3 விக்கெட் எடுத்தனர்.
சேசிங் செய்த திண்டுக்கல் சாம்பியன்ஸ் சி.சி.அணி 20.4 ஓவரில் 117 ரன்கள் மட்டுமே ஆல்அவுட்டானது.
அருண்குமார், பிரபாகரன் தலா 3விக்கெட் எடுத்தனர். ஆர்.வி.எஸ். கல்லுாரி மைதானத்தில் நடந்த ஓட்டல் ஸ்ரீ பாலாஜி பவன் கோப்பைக்கான 4வது டிவிஷன் லீக்
போட்டியில் திண்டுக்கல்நல்லம்பட்டி யங்ஸ்டார் சி.சி. அணி 24.4 ஓவரில் 161ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது.சந்திரன் 59ரன்கள், ஜெகதேஷ் 4, ரமேஷ் 3 விக்கெட் எடுத்தனர்.
சேசிங் செய்த திண்டுக்கல் ஏஞ்சல் காஸ்டர்ஸ்சி.சி.அணி 19.3 ஓவரில் 126ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது.
ஜனார்த்தனன் 36ரன்கள், முத்து 4, மாதேஷ்3 விக்கெட் எடுத்தனர்.