sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கிரிக்கெட் லீக்: நிலக்கோட்டை வாரியர்ஸ் அணி வெற்றி

/

கிரிக்கெட் லீக்: நிலக்கோட்டை வாரியர்ஸ் அணி வெற்றி

கிரிக்கெட் லீக்: நிலக்கோட்டை வாரியர்ஸ் அணி வெற்றி

கிரிக்கெட் லீக்: நிலக்கோட்டை வாரியர்ஸ் அணி வெற்றி


ADDED : டிச 03, 2024 07:04 AM

Google News

ADDED : டிச 03, 2024 07:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான டேக் - டி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டியில் நிலக்கோட்டை வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது.

பிரஸித்தி வித்யோதயா கோப்பைக்கான 2 வது டிவிஷன் போட்டிகள் திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது.

முதலில் நடந்த போட்டியில் ஒட்டன்சத்திரம் சாமுராய் கிரிக்கெட் கிளப் அணி பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது.

ஹரிஹரன் 90 ரன், சரவணக்குமார் 4 விக்கெட் எடுத்தார். தொடர்ந்து சேசிங் செய்த திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 19.1 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

சூர்யா 43 ரன், அருண்குமார் 4 விக்கெட் எடுத்தார். மற்றொரு போட்டியில் நத்தம் என்.பி.ஆர்., குழுமம் அணி 23 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. சுந்தரவேல் 88 ரன், ரமேஷ்குமார் 3 விக்கெட் எடுத்தார். தொடர்ந்து சேசிங் செய்த திண்டுக்கல் சாமியார் கிரிக்கெட் கிளப் அணி 19.4 ஓவர்களில் 115 ரன்களில் ஆல் ஆவுட் ஆகி தோல்வியை தழுவியது. எட்வின் அரசன் 51 (நாட்அவுட்), சல்மான்கான், விமல் தலா 3 விக்கெட் எடுத்தனர்.

ஓட்டல் பார்சன்ஸ் கோர்ட் கோப்பைக்கான 3 வது டிவிஷன் போட்டிகள் ரிச்மேன் மைதானத்தில் நடந்தது.

முதலில் நடந்த போட்டியில் திண்டுக்கல் சச்சின் கிரிக்கெட் கிளப் அணி பேட்டிங் செய்து 23.3 ஓவர்களில் 75 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிலம்பரசன், மருதுபாண்டியன் தலா 3 விக்கெட் எடுத்தனர்.

தொடர்ந்து சேசிங் செய்த வேடசந்துார் சீனிபாலா கிரிக்கெட் கிளப் அணி 14.3 ஓவர்களில் 3 விக்கெட் மட்டுமே இழந்து 75 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நிலக்கோட்டை வாரியர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 96 ரன்கள் எடுத்தது. அப்துல்லத்தீப் 39, உதயகனி 4 விக்கெட் எடுத்தார். தொடர்ந்து சேசிங் செய்த எரியோடு ஸ்கில் கிரிக்கெட் கிளப் அணி 18.3 ஓவர்களில் 73 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வியை தழுவியது. அருண்குமார் 4 விக்கெட் எடுத்தார்.






      Dinamalar
      Follow us