/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிரிக்கெட் லீக்; நிலக்கோட்டை வாரியர்ஸ் அணி வெற்றி
/
கிரிக்கெட் லீக்; நிலக்கோட்டை வாரியர்ஸ் அணி வெற்றி
ADDED : ஜன 30, 2024 07:05 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான டேக்-டி.டி.சி.ஏ.கிரிக்கெட் லீக் போட்டியில் நிலக்கோட்டை வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது.
ஸ்ரீ.வீ.கல்லுாரி மைதானத்தில் நடந்த பிரசித்தி வித்யோதயா கோப்பைக்கான 2வது டிவிஷன் லீக். போட்டியில்ஆடிய திண்டுக்கல்எக்ஸ்பிரஸ் லெவன் அணி 25 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 180ரன்கள் எடுத்தது. சிவானந்தன்62, கேசவராஜ் 63ரன்கள் எடுத்தனர்.
சேசிங் செய்த ஒட்டன்சத்திரம் நைக் சி.சி. அணி 25 ஓவரில் 8 விக்கெட் இழந்து128ரன்கள் மட்டுமே எடுத்தது. நாட்டுதுரை 31ரன்கள், இப்ராம்ஷா 3 விக்கெட் எடுத்தனர். பி.எஸ்.என்.ஏ., கல்லுாரி மைதானத்தில் நடந்த ஓட்டல் பார்சன்ஸ் கோர்ட் கோப்பைக்கான 3வது டிவிஷன் லீக் போட்டியில் நிலக்கோட்டை வாரியர்ஸ் சி.சி. அணி 25 ஓவரில் 7 விக்கெட் இழந்து 157ரன்கள் எடுத்தது. ராஜா 35,
அருண்குமார் 50ரன்கள், பிரசாந்த் 3 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த திண்டுக்கல்ஆல்ரவுண்டர்ஸ் சி.சி. அணி23.5 ஓவரில் 126ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது.
கருப்பையா 3 விக்கெட் எடுத்தார். ஆர்.வி.எஸ். கல்லுாரி மைதானத்தில் நடந்த ஓட்டல் பார்சன்ஸ் கோர்ட் கோப்பைக்கான 3வது டிவிஷன் லீக் போட்டியில் திண்டுக்கல் மன்சூர் சி.சி, அணி 28 ஓவரில் 3 விக்கெட் இழந்து 201ரன்கள் எடுத்தது. ஜெயவீரபாண்டியன் 104, அஸ்வதாமன் 72ரன்கள், பூபதிராஜ் 4 விக்கெட் எடுத்தனர்.சேசிங் செய்த திண்டுக்கல்சாம்பியன் சி.சி.அணி 20.2 ஓவரில் 107 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது.
விக்னேஷ் 3 விக்கெட் எடுத்தார். ஆர்.வி.எஸ் கல்லுாரி மைதானத்தில் நடந்த ஓட்டல் பார்சன்ஸ் கோர்ட் கோப்பைக்கான 3வது டிவிஷன் லீக் போட்டியில் திண்டுக்கல் சேலஞ்சர்ஸ் சி.சி. அணி 23.2 ஓவரில் 129 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. பாரதிதாசன் 31ரன்கள், கருப்பையா 3 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த திண்டுக்கல் காட்சன் சி.சி. அணி 20 ஓவரில் 3 விக்கெட்
மட்டுமே இழந்து 130ரன்கள் எடுத்து வென்றது. ராஜசேகர் 67ரன்கள் எடுத்தார்.
பி.எஸ்.என்.ஏ. கல்லுாரி மைதானத்தில் நடந்த ஹோட்டல் பார்சன்ஸ் கோர்ட் கோப்பைக்கான 3வது டிவிஷன் லீக் போட்டியில் திண்டுக்கல் பரத் சி.சி. அணி 24 ஓவர்களில் 142 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது.
கணேஷ் 43,நிரஞ்சன் 35ரன்கள், மதன் 3, மனோஜ்குமார் 5 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த கொடைரோடு கொடை சி.சி. அணி15.5 ஓவரில் 3 விக்கெட் மட்டுமே இழந்து 143ரன்கள் எடுத்து வென்றது. மனோஜ் குமார் 48 (நாட்அவுட்), சுரேஷ்37ரன்கள் எடுத்தனர்.
ஸ்ரீ.வீ. கல்லுாரி மைதானத்தில் நடந்த ஓட்டல் ஸ்ரீ பாலாஜிபவன் கோப்பைக்கான 4வது டிவிஷன் லீக் போட்டியில் திண்டுக்கல்மெஜஸ்டிக் சி.சி.அணி 25 ஓவரில் 9 விக்கெட் இழந்து 120ரன்கள் எடுத்தது.
சுரேஷ்பாபு 60ரன்கள், அப்துல்கரீம் 4 விக்கெட் எடுத்தனர்.
சேசிங் செய்த திண்டுக்கல் சச்சின் சி.சி. அணி 21.2 ஓவரில் 92ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது.
சரத்குமார் 31ரன்கள், முத்துராமன் 4 விக்கெட் எடுத்தனர்.