/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிரிக்கெட் லீக்: சாமியார் தோட்டம் அணி வெற்றி
/
கிரிக்கெட் லீக்: சாமியார் தோட்டம் அணி வெற்றி
ADDED : நவ 27, 2024 05:16 AM
திண்டுக்கல், : திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான டேக் - டி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டியில் சாமியார் தோட்டம் அணி வெற்றி பெற்றது.
பிரஸித்தி வித்யோதயா கோப்பைக்கான 2 வது டிவிஷன் போட்டிகள் பல்வேறு மைதானங்களில் நடந்தன. ரிச்மேன் மைதானத்தில் நடந்த முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் சாமியார் தோட்டம் கிரிக்கெட் கிளப் அணி 23.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 115 ரன்கள் எடுத்தது.
சண்முகசுந்தரம் 4 விக்கெட் எடுத்தார். தொடர்ந்து சேசிங் செய்த திண்டுக்கல் மன்சூர் யங்ஸ்டர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 16.5 ஓவர்களில் 47 ரன்களில் ஆல் அவுட் ஆகி தோல்வியை தழுவியது. எட்வின் அரசன் 3 விக்கெட் எடுத்தார்.
அதே மைதானத்தில் நடந்த மற்றொரு போட்டியில் நத்தம் என்.பி.ஆர்., ஜி.ஐ., அணி 25 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது.
ரமேஷ் 40 ரன், பிரபுகாந்தி 3 விக்கெட் எடுத்தார். திண்டுக்கல் வல்கனோ ரைடர்ஸ் அணி 21.5 ஓவர்களில் 80 ரன்களில் ஆல் அவுட் ஆகி தோல்வியை தழுவியது. சுந்தரவேல் 5, சாம்சுபேஷ் 3 என விக்கெட் எடுத்தனர்.
ஆர்.வி.எஸ்., கல்லுாரி மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 24.4 ஓவர்களில் 94 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
சதீஸ்குமார் 4 விக்கெட் எடுத்தார். தொடர்ந்து சேசிங் செய்த திண்டுக்கல் எக்ஸ்பிரஸ் லெவன் அணி 18.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அருண் பிரகாஷ்ராஜ் 42 ரன்னும், ஜீவானந்தம் 3 விக்கெட்டும் (ஹாட்ரிக்) எடுத்தனர்.
அதே மைதானத்தில் நடந்த மற்றொரு போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அய்யலுார் கிளாசிக் சிசி அணி 25 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது. ஞானபிரகாஷ் 88, கவுதம் 53 என ரன் எடுத்தனர். தொடர்ந்த சேசிங் செய்த கொடைரோடு கொடை சிசி அணி 25 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. டெனிஸ் 75 ரன், பரமேஸ்வரன் 4, ஸ்ரீதர் 3 என விக்கெட் எடுத்தனர்.
ஆர்.வி.எஸ்., கல்லுாரி மைதானத்தில் நடந்த ஓட்டல் பார்சன்ஸ் கோர்ட் கோப்பைக்கான 3 வது டிவிஷன் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நல்லாம்பட்டி யங்ஸ்டர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 17.5 ஓவர்களில் 45 ரன்னிற்கு ஆல் அவுட் ஆனது. பூபதிராஜா 3, தினேஷ் 4 என விக்கெட் எடுத்தனர். தொடர்ந்து சேசிங் செய்த திண்டுக்கல் மன்சூர் கிரிக்கெட் கிளப் அணி 4.3 ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 49 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.