/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிரிக்கெட் லீக்: வேடசந்துார் ஜாஹிர் அணி வெற்றி
/
கிரிக்கெட் லீக்: வேடசந்துார் ஜாஹிர் அணி வெற்றி
ADDED : அக் 21, 2024 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான டேக் - டி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டியில்வேடசந்துார் ஜாஹிர் அணி வெற்றி பெற்றது.
திண்டுக்கல் டிராகன்ஸ் கோப்பைக்கான முதல் டிவிசன் லீக் போட்டி ஆர்.வி.எஸ்., மைதானத்தில் நடந்தது. முதலில் பேட்டிங்க செய்த ஒட்டன்சத்திரம் நைக் கிரிக்கெட் கிளப் அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 42 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராஜேஷ் கண்ணன் 6 விக்கெட் எடுத்தார். சேசிங் செய்த வேடசந்துார் ஜாஹிர் கிரிக்கெட் கிளப் அணி 7.4 ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 43 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராகுல் (28 நாட்அவுட்).

