/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிரிக்கெட் லீக்: விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி வெற்றி
/
கிரிக்கெட் லீக்: விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி வெற்றி
கிரிக்கெட் லீக்: விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி வெற்றி
கிரிக்கெட் லீக்: விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி வெற்றி
ADDED : டிச 24, 2024 05:10 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான டேக் - டி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டியில் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி வெற்றி பெற்றது.
ஆர்.வி.எஸ்., கிரிக்கெட் மைதானத்தில் நடந்த திண்டுக்கல் டிராகன்ஸ் கோப்பைக்கான முதல் டிவிஷன் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பழநி யுவராஜ் யங்ஸ்டர்ஸ் சிசி அணி 33.2 ஓவர்களில் 135 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
பிரதீஷ்குமார் 36, சுதீஸ் 36 ரன், கார்த்திக் சரண் 4 விக்கெட் எடுத்தார். தொடர்ந்து சேசிங் செய்த திண்டுக்கல் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 21.1 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 136 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சஞ்சய் பாலாஜி 32, ஆசிக் 26, வினோத்குமார் 35 (நாட்அவுட்) ரன் எடுத்தனர்.
பி.எஸ்.என்.ஏ., கிரிக்கெட் மைதானத்தில் நடந்த திண்டுக்கல் டிராகன்ஸ் கோப்பைக்கான முதல் டிவிஷன் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் ஸ்ரீவசந்தா ஸ்வீட்ஸ் சிசி அணி 49.4 ஓவர்களில் 195 ரன்களில் ஆல் அவுட் ஆனது. தங்கபாண்டியன் 34, ராஜேஷ் 56, ரியாஸ்கான் 35 ரன், நாசர்ஹூசைன் 4 விக்கெட் எடுத்தார்.
தொடர்ந்து சேசிங் செய்த பழநி டாமினேட்டர்ஸ் அணி 39.4 ஓவர்களில் 165 ரன்களில் ஆல் அவுட் ஆகி தோல்வியை தழுவியது. விக்னேஷ் 36, கார்த்திகேயன் 56 ரன், ரியாஸ்கான், தங்கபாண்டியன் தலா 3 விக்கெட் எடுத்தனர்.
ரிச்மேன் மைதானத்தில் நடந்த பிரஸித்தி வித்யோதயா கோப்பைக்கான 2வது டிவிஷன் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அய்யலுார் கிளாசிக் சிசி அணி 21.5 ஓவர்களில் 106 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஞானபிரகாஷ் 42 ரன் எடுத்தார்.
தொடர்ந்து சேசிங் செய்த வேடசந்துார் ஜாஹீர் ப்ராமிஸிங் லெவன் அணி 22.2 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 107 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரிச்மேன் மைதானத்தில் நடந்த ஓட்டல் பார்சன்ஸ் கோர்ட் கோப்பைக்கான 3வது டிவிஷன் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் பாரத் சிசி அணி 24.2 ஓவர்களில் 124 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
முகமது யூசுப் 36, வீரமணி 37 (நாட்அவுட்) ரன், குமரேசன் 5 விக்கெட் எடுத்தார். தொடர்ந்து சேசிங் செய்த எரியோடு யங்ஸ்டர்ஸ் அணி 25 ஓவர்களில் 122 ரன்களில் ஆல் அவுட் ஆகி தோல்வியை தழுவியது. நிசாந்தன் 3 விக்கெட் எடுத்தார்.