/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிரிக்கெட் போட்டி: அமைச்சர் துவக்கி வைப்பு
/
கிரிக்கெட் போட்டி: அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : ஜன 14, 2025 10:52 PM

ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் தொகுதியில் தைப்பொங்கலை முன்னிட்டு நடந்த கிரிக்கெட் போட்டிகளை உளவுத்துறை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்.
தைப்பொங்கல் முன்னிட்டு தி.மு.க., சார்பில் ஒட்டன்சத்திரம் ,விருப்பாச்சி, இடையகோட்டை பகுதிகளில் கிரிக்கெட் போட்டி நடந்தது. உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார். மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி, ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன்,தர்மராஜ், பாலு, நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், ஹரிஹரசுதன் துணை அமைப்பாளர்கள் பாண்டியராஜன், ஆனந்தன்,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அசோக் வேலுச்சாமி கலந்து கொண்டனர்.