/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பிப்.1ல் கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு
/
பிப்.1ல் கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு
ADDED : ஜன 28, 2025 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்டங்களுக்கு இடையேயான போட்டிகளில் பங்குபெறும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 25 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்கான தேர்வு பிப்.1ம் தேதி காலை 9:00 மணிக்கு திண்டுக்கல், சிலபாடி பிரசித்தி வித்யோதயா பள்ளியில் நடைபெறுகிறது.
பங்குபெறும் வீரர்கள் தகுந்த அடையாள அட்டையுடன், வெள்ளை சீருடை அணிந்து பங்கு பெறலாம்.
விபரங்களுக்கு சங்க மேலாளரை 96556 63945ல் அணுகலாம். 1.09.1999க்குள் பிறந்தவர்கள் மட்டுமே பங்கு பெற முடியும் என இணைச்செயலர் மகேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

