ADDED : ஜன 21, 2025 03:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்:   திண்டுக்கல் மாவட்டம்ஒட்டன்சத்திரம் வனச்சரகம் மேற்கு மலை தொடர்ச்சி சிந்தலவாடம்பட்டி  மலை அடிவாரத்தில் தென்னை மரங்கள் அதிகம்உள்ளது.
மலைப்பகுதியில் இருந்து வரும் யானைகள் விவசாய நிலங்களுக்குள் நுழைந்து தென்னை மரங்கள் , பயிர்களை சேதப்படுத்தின. இதை தடுக்க சோலார் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் இரவு இப்பகுதிக்குள்  நுழைந்த  ஒற்றை யானை  சோலார் வேலிகளை சேதப்படுத்தியதுடன் தென்னை மரங்களையும் சேதப்படுத்தியது. ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

