/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குரங்குகளால் வீணாகும் விளைபொருட்கள்
/
குரங்குகளால் வீணாகும் விளைபொருட்கள்
ADDED : நவ 08, 2025 01:47 AM
வடமதுரை: வேலாயுதம்பாளையம் பகுதியில் சுற்றி திரியும் குரங்குகளால் விளை பொருட்கள் அதிகளவில் வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
வடமதுரை செங்குறிச்சி ரோட்டில் வேலாயுதம்பாளையம் அடுத்து ஊற்றாக்கரை வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் அதிகளவில் குரங்குகள் இருந்தன. அப்பகுதியில் இருந்த விவசாய நிலங்களில் பாதிப்பு ஏற்படுத்தியதால் கிராம மக்களே குரங்கு பிடிப்பவர்களை வரவழைத்து பிடித்து சென்று அழகர்மலையில் விட்டனர்.
ஆனால் இதே போல் வேறு பகுதிகளில் சுற்றி திரிந்த குரங்குகள் இப்பகுதியில் தற்போது விடப்பட்டுள்ளன.
கூட்டமாக சுற்றும் குரங்குகள் இப்பகுதியிலுள்ள தோட்டங்களில் விளை பொருட்களை பெருமளவில் நாசமாக்குகின்றன. குரங்குகள் தின்பதை காட்டிலும் வீணாகும் பொருட்களின் அளவு மிக அதிகமாக இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குரங்குகளை போதிய உணவு கிடைக்கும் வகையில் இருக்கும் அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு செல்ல வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

