/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனில் மக்கள் கூட்டம்
/
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனில் மக்கள் கூட்டம்
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனில் மக்கள் கூட்டம்
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனில் மக்கள் கூட்டம்
ADDED : ஜன 18, 2024 06:21 AM

திண்டுக்கல் : பொங்கல் விடுமுறை முடிந்து வெளிமாவட்டங்களுக்கு வேலைக்கு செல்வோர் தங்கள் குடும்பத்துடன் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட்,ரயில்வே ஸ்டேஷனில் குவிந்தனர். கூடுதல் பஸ்களை இயக்கியும் பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை,மதுரை,திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு குடும்பத்தோடு ஏராளமான பயணிகள் வந்தனர். நேற்றுடன் பொங்கல் பண்டிகை முடிந்தநிலையில் சொந்த ஊருக்கு வந்தவர்கள் மீண்டும் அவரவர் வேலை பார்க்கும் பகுதிக்கு செல்வதற்காக நேற்று திண்டுக்கல் பஸ்ஸ்டாண்ட்,ரயில்வே ஸ்டேஷனில் குவிந்தனர். திருச்சி,மதுரை பஸ்கள் நிற்கும் இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. திண்டுக்கல் மண்டல போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது, இருந்தபோதிலும் போதிய பஸ்கள் இல்லாததால் பயணிகளின் பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
வந்த பஸ்களிலும் பயணிகள் முண்டியடித்து ஏறினர். ஒருசிலர் பஸ்சில் இடம் கிடைக்காமல் படிக்கட்களில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர். இதுபோன்ற நிலையை முன்கூட்டியே தெரிந்து கொண்டவர்கள் ரயில்களில் முன்பதிவு செய்து பயணத்தை மேற்கொள்கின்றனர். இதிலும் சிலருக்கு முன்பதிவு டிக்கெட்கள் கிடைக்காமல் தவிக்கும் நிலையும் ஏற்பட்டது. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இருக்க இடமின்றி நெருக்கடியில் பயணிக்கும் நிலையும் ஏற்பட்டது. விழாக்காலங்களில் காலம் காலமாக தொடரும் இந்தபிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க போக்குவரத்து கழகம்,ரயில்வே துறை அதிகாரிகள் முன்வரவேண்டும்.