/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சி.எஸ்.கே., கிரிக்கெட்: ஜி.டி.என்., அணி வெற்றி
/
சி.எஸ்.கே., கிரிக்கெட்: ஜி.டி.என்., அணி வெற்றி
ADDED : ஏப் 08, 2025 04:58 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம், சென்னை சூப்பர் கிங்ஸ் இணைந்து நடத்திய கல்லுாரிகளுக்கிடையேயான மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஜி.டி.என்., கல்வி குழும அணி வென்றது.
ஆர்.வி.எஸ்., கல்லுாரி மைதானத்தில் நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் திண்டுக்கல் ஜி.டி.என்., கல்விக்குழும அணி பேட்டிங் செய்து 30 ஓவர்களில் 240 க்கு ஆல்அவுட் ஆனது.
வெங்கடேஷ்வர் 51, நவீன்குமார் 51, சபரிநாதன் 37, விக்னேஷ் 4, மாதேஷ்குமார் 3 விக்கெட். சேசிங் செய்த ஜி.டி.என்., ஆர்ட்ஸ் கல்லுாரி அணி 30 ஓவர்களில் 217/8 எடுத்து தோற்றது. பிரான்சிஸ்த்ரிலோக் 101, தனுஷ்பாண்டி 41. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் காந்திகிராம பல்கலை அணி 25.5 ஓவர்களில் 103 க்கு ஆல்அவுட் ஆனது.
சேசிங் செய்த நத்தம் என்.பி.ஆர்., பொறியியல் கல்லுாரி அணி 21.3 ஓவர்களில் 105/7 எடுத்து வென்றது. கவின்ராசு 29.
இறுதிப்போட்டியில் திண்டுக்கல் ஜி.டி.என்., கல்விக்குழும அணி 30 ஓவர்களில் 213/6. சஞ்சய்வெங்கடேஷ்வர் 101(நாட்அவுட்), கவுதம் 33, அன்பரசன் 33. சேசிங் செய்த நத்தம் என்.பி.ஆர்., பொறியியல் கல்லுாரி அணி 23.2 ஓவர்களில் 79 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. சபரிநாதன் 4, சந்துரு 3 விக்கெட். இதன்மூலம் ஜி.டி.என்., கல்விக்குழும அணி கோப்பையை வென்றது.
சிறந்த பேட்டராக காந்திகிராம பல்கலை அணியின் மோகன், ஆல்ரவுண்டராக சபரீஸ்வரன், பவுலராக என்.பி.ஆர்., அணியின் மதிசெல்வன், தொடர்நாயகனாக ஜி.டி.என்., கல்விக்குழும அணியின் சஞ்சய்வெங்கடேஷ்வர் தேர்தெடுக்கப்பட்டனர்.
தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் தமிழக கிரிக்கெட் சங்க முன்னாள் உதவி செயலர் வெங்கட்டராமன் பரிசு, கோப்பை வழங்கினார்.

