/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சி.எஸ்.கே., கிரிக்கெட்: ஒட்டன்சத்திரம் பள்ளி வெற்றி
/
சி.எஸ்.கே., கிரிக்கெட்: ஒட்டன்சத்திரம் பள்ளி வெற்றி
சி.எஸ்.கே., கிரிக்கெட்: ஒட்டன்சத்திரம் பள்ளி வெற்றி
சி.எஸ்.கே., கிரிக்கெட்: ஒட்டன்சத்திரம் பள்ளி வெற்றி
ADDED : பிப் 06, 2025 05:55 AM
திண்டுக்கல்; சி.எஸ்.கே., திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் இணைந்து நடத்தும் பள்ளிகளுக்கிடையேயான லீக் போட்டியில் ஒட்டன்சத்திரம் பட்ஸ் பள்ளி வெற்றி பெற்றது.
லீக்போட்டிகள் பி.எஸ்.என்.ஏ., ரிச்மேன், ஆர்.வி.எஸ்., நத்தம்என்.பி.ஆர்.,கல்லுாரி மைதானங்களில் நடந்தது.
முதலில் பேட்டிங் செய்த வடமதுரை அரசுப் பள்ளி அணி 20 ஓவர்களில் 159/6. லித்தேஸ்வரன் 32, பார்த்திபன் 44. சேசிங் செய்த திண்டுக்கல் அனுகிராஹா இண்டர்நேஷனல் பள்ளி 20 ஓவர்களில் 143/9 எடுத்து தோற்றது.
வருண்கிருஷ்ணா 52(நாட்அவுட்). திண்டுக்கல் அனுகிராஹா இண்டர்நேஷனல் பள்ளி முதலில் பேட்டிங் செய்து 14.2 ஓவர்களில் 47 க்கு ஆல்அவுட் ஆனது. தனுஷ் 5 விக்கெட். சேசிங் செய்த எஸ்.எஸ்.எம்., அகாடமி 5.5 ஓவர்களில் 48/2 எடுத்து வெற்றி பெற்றது.
திண்டுக்கல் பிரஸித்தி வித்யோதயா ஏ அணி முதலில் பேட்டி செய்து 25 ஓவர்களில் 237/6. கீர்த்திவாசன் 59, ஸ்ரீஹரி 68. சேசிங் செய்த அக்சுதா அகாடமி அணி 25 ஓவர்களில் 32 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது.
ஸ்ரீஹரி 4 விக்கெட். முதலில் பேட்டிங் செய்த ஒட்டன்சத்திரம் பட்ஸ் அணி 20 ஓவர்களில் 94/9. சேசிங் செய்த திண்டுக்கல் நேருஜி நினைவு பள்ளி அணி 78 க்கு ஆல்அவுட் ஆகி தோல்வியைதழுவியது.
ஜோதிபிரசித் 3 விக்கெட். முதலில் பேட்டிங் செய்த செட்டிநாயக்கன்பட்டி அரசுப் பள்ளி அணி 17.2 ஓவர்களில்60க்கு ஆல்அவுட் ஆனது. சுகந்த் 5, ஜெயந்த் 3 விக்கெட். சேசிங் செய்த வேடசந்துார் பெட்பர்டு அகாடமி அணி 20.3 ஓவர்களில் 61/9 எடுத்து வென்றது.
பிரகாஷ், சனோபர்பாத்திமா தலா 3 விக்கெட். திண்டுக்கல் பிரஸித்தி வித்யோதயா பி அணி முதலில் பேட்டி செய்து 25 ஓவர்களில் 170/5. சச்சின் 74, விஸ்வஹரிணி 47. சேசிங் செய்த எஸ்.எம்.பி.எம்., பள்ளி 25 ஓவர்களில் 161/8 எடுத்து தோற்றது.
கெல்வின்ரோஹித் 41, முகமதுஅஸ்வாக் 44.