/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குற்றங்களுக்கு வழிவகுப்பு : பள்ளிகளில் தொடரும் கலாசார சீரழிவு: கண்டுகொள்ளாத துறையால் பாதிப்பு
/
குற்றங்களுக்கு வழிவகுப்பு : பள்ளிகளில் தொடரும் கலாசார சீரழிவு: கண்டுகொள்ளாத துறையால் பாதிப்பு
குற்றங்களுக்கு வழிவகுப்பு : பள்ளிகளில் தொடரும் கலாசார சீரழிவு: கண்டுகொள்ளாத துறையால் பாதிப்பு
குற்றங்களுக்கு வழிவகுப்பு : பள்ளிகளில் தொடரும் கலாசார சீரழிவு: கண்டுகொள்ளாத துறையால் பாதிப்பு
ADDED : ஜன 24, 2025 07:21 AM

மாவட்டத்தில் ஏராளமான பள்ளிகள் செயல்படும் நிலையில் சமீபகாலமாக ஆசிரியர் மாணவர்களிடையே இணக்கம் இல்லாத இடைவெளி நீடித்து வருகிறது. கற்பிக்கும் ஆசிரியர்கள் குருவாக கருதப்படும் நிலையில் சில ஆசிரியர்களின் தவறான போக்கால் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்திற்கும் அவப்பெயர்கள் ஏற்படுகின்றன.
இதனால் நன்மதிப்போடு செயல்படக்கூடிய ஆசிரியர்கள் நொந்து கொள்கின்றனர்.
ஒழுக்க சீர்கேடாக நடக்கும் ஆசிரியர்கள் மீது கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்பது நேர்மையாக பணிபுரியும் ஆசிரியர்களின் ஆதங்கமாக உள்ளது.சமீபகாலமாக பள்ளி வளாக பகுதிகளிலே போதைப்பொருள் பயன்படுத்தும் மாணவர்களின் போக்கு, ஆசிரியர்கள் மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தல் செய்வது, அலைபேசி பயன்பாடு, பள்ளிக்கு முறையாக செல்லாத ஆசிரியர்கள், பள்ளிகள் முறையாக செயல்படுவதை கண்காணிக்க தவறும் அதிகாரிகளால் பள்ளி செயல்பாடுகள் பாதித்துள்ளது. மாணவர்களின் நடவடிக்கையை கண்டிக்கும் ஆசிரியர்களின் போக்கிற்கு கடிவாளமிட்ட விதிகளால் ஆசிரியர்கள் தங்களுக்கு உள்ள கடமையை மட்டும் செய்து மாணவர்கள் பிரச்னைகளை தவிர்க்கும் போக்கு நீடிக்கிறது.
இதற்கு கொடைக்கானல் வெள்ளகெவி பெரியூர் பள்ளியில் ஆண்டு கணக்கில் பள்ளிக்கு செல்லாமல் மாணவர்கள் வருகை செய்தது போன்ற மாய தோற்றத்தை ஏற்படுத்திய தலைமை ஆசிரியர், பூலத்துார் பள்ளியில் மாணவனின் மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படாமல் காழ்ப்புணர்ச்சியோடு நடந்து கொண்ட ஆசிரியரின் செயல்படால் மாணவன் தற்கொலை, தாண்டிக்குடி பள்ளியில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்து ஆசிரியர் பணி நீக்க சர்ச்சை, ஆண்டு கணக்கில் பள்ளிக்கு செல்லாத தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்து கரிசனம் செய்தது உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகளின் கண்டிப்பற்ற நடவடிக்கை உதாரணமாக உள்ளது.
ஆசிரியர்கள் மாணவர்களின் நடவடிக்கை மீது கண்டிப்பு காட்டாத சூழலால் மாணவர்கள் கட்டுபாடின்றி சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர்.
கல்வி,ஒழுக்கத்தை போதிக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இணக்கம் இல்லாத இச்சூழலால் எதிர்கால தலைமுறை மாணவர்கள் சமுதாய சீர்கேட்டுகளுடன் தங்களது வாழ்வை இழக்க காரணமாக உள்ளது.

