/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை'யில் சூறாவளி: படகு சவாரி நிறுத்தம்
/
'கொடை'யில் சூறாவளி: படகு சவாரி நிறுத்தம்
ADDED : மே 28, 2025 02:29 AM

கொடைக்கானல்:கொடைக்கானல் மலைப்பகுதியில் வீசும் சூறாவளியால் படகு சவாரி நிறுத்தப்பட்டது.
கொடைக்கானலில் மே 24ல் மலர்கண்காட்சி, கோடை விழா தொடங்கியது. இதனிடையே சூறாவளி, சாரல் மழை நீடித்து வருவதால் கோடை விழா நிகழ்ச்சிகளான படகு போட்டி, படகு அலங்கார போட்டிகள் ரத்து செய்யப்பட்டன.
நேற்று காலை முதல் தொடர்ச்சியாக பலத்த காற்று வீசியதால் நகரில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனுார், பூண்டி, கவுஞ்சி , கிளாவரை உள்ளிட்ட பகுதிகளில் மின்தடையால் 3 நாளாக இருளில் மூழ்கி உள்ளன.
இதனால் தொலைத்தொடர்பு சேவை பாதித்து தீவு போல் மாறி உள்ளது. மன்னவனுார் வெட்டுவரை பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதித்தது. இச்சூழலால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்துள்ளது.
காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது. இதனிடையே காற்றின் வேகம் அதிகரித்ததால் தமிழ்நாடு சுற்றுலாத்துறை படகு குழாமில் ஒரு யூனிட்டில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. கொடைக்கானல் மேல் மலை பகுதிக்கு செல்லும் மின் பாதையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் மின்வாரியத்தினர் ஈடுபட்டனர்.