/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேதமான மின்கம்பங்கள், கம்பிகளால் ... ஆபத்து : மழைக்காலத்தில் அடிக்கடி மின்தடை
/
சேதமான மின்கம்பங்கள், கம்பிகளால் ... ஆபத்து : மழைக்காலத்தில் அடிக்கடி மின்தடை
சேதமான மின்கம்பங்கள், கம்பிகளால் ... ஆபத்து : மழைக்காலத்தில் அடிக்கடி மின்தடை
சேதமான மின்கம்பங்கள், கம்பிகளால் ... ஆபத்து : மழைக்காலத்தில் அடிக்கடி மின்தடை
ADDED : நவ 26, 2025 05:01 AM

ஒட்டன்சத்திரம்:திண்டுக்கல் மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மின்தடையை தவிர்க்க சேதமடைந்த மின்கம்பங்கள், மின்மாற்றிகள் மின் கம்பிகளை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்காலத்தில் மின்சாரம் இன்றி எந்த சாதனங்களையும் இயக்க முடியாது. சிறிது நேரம் மின்தடை ஏற்பட்டாலும் மின்விசிறிகளை இயக்க முடிவதில்லை. இதனால் கொசு தொல்லை, போதிய காற்றோட்டம் இன்றி குழந்தைகள் முதியோர்கள் பெண்கள் சிரமப்படும் நிலை உள்ளது. தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் படிக்க முடியாமல் தவிக்கும் நிலையும் ஏற்படுகிறது. தொட்டிகளுக்கு தண்ணீர் நிரப்ப முடியாது என பலவித சிரமத்திற்கு பொதுமக்கள் ஆளாகின்றனர். மழைக்காலத்தில் இரவு நேரத்தில் மின்தடை ஏற்பட்டால் சீரமைக்க பல மணி நேரம் ஆகிறது. இதற்கு காரணம் மின்கம்பங்கள், மின்பாதைகள் போதிய பராமரிப்பின்றி இருப்பது தான்.
பல இடங்களில் மின்கம்பங்கள் சேதம் அடைந்து காணப்படுகிறது.
இன்னும் பல இடங்களில் சுற்றி செடிகள் முளைத்து மின் கம்பியை சூழ்ந்துள்ளது. இதனால் மின் விபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. சில இடங்களில் மரக்கிளைகள் மின் கம்பிகளில் உரசுவதால் மின்னழுத்த குறைவு ஏற்படுகிறது. இதனால் மின் சாதனங்கள் பழுதடைவதும் உண்டு.
அனைத்து துணை மின் நிலையங்களிலும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்த போதிலும் இன்னும் கிராம பகுதிகளில் கூடுதல் அக்கறை செலுத்தி தாழ்வான மின்கம்பிகள், சேதமடைந்த மின் கம்பங்களை கண்டறிந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். எவ்வளவு மழை பெய்தாலும் சீராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பராமரிப்பு அவசியம்
மின்கம்பிகள் செல்லும் பாதையை முறையாக பராமரித்தாலே மின்தடை ஏற்படாமல் இருக்கும். தாழ்வாக உள்ள மின்கம்பிகள் பலத்த காற்று வீசும் போது ஒன்றொடொன்று உரசி மின் துண்டிப்பு ஏற்படுகிறது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்கம்பிகளில் உரசும் மரக்கிளைகளை அவ்வப்போது வெட்டிவிட வேண்டும். மின் அழுத்தத்திற்கு ஏற்ப மின்மாற்றிகளின் திறனை மேம்படுத்த வேண்டும். மழை காலத்தில் ஏற்படும் மின் தடையால் கொசுத்தொல்லை அதிகரித்து இரவு நேரத்தில் சரிவர துாங்க முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது.
- -செந்தில் அண்ணாமலை, பா.ஜ.,
தொகுதி பொறுப்பாளர், ஒட்டன்சத்திரம்.

