/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேகம் ஆலோசனை
/
திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேகம் ஆலோசனை
ADDED : நவ 26, 2025 04:48 AM

பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திருஆவினன்குடி கோயில் கும்பாபிஷேகம் கலெக்டர் சரவணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கோயில் கும்பாபிஷேகம் டிச.8 ல் நடக்கிறது.
இதை தொடர்ந்து திண்டுக்கல் கலெக்டர் சரவணன் தலைமையில் கும்பாபிஷேக பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் தண்டபாணி விடுதி வளாகத்தில் நடந்தது.
பக்தர்களின் பாதுகாப்பு, கூட்டத்தை கட்டுப்படுத்துதல் ,போக்குவரத்து மாற்றம், ஆக்கிரமிப்பு அகற்றம் ,குடிநீர் வசதி குறித்து ஆலோசிக்கப்பட்டது.
எஸ்.பி., பிரதீப் ,டி.எஸ்.பி., தனஞ்செயன், ஆர்.டி.ஓ., கண்ணன் கோயில் துணை கமிஷனர் வெங்கடேஷ், உதவி கமிஷனர் லட்சுமி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் பாலமுருகன், நகராட்சி கமிஷனர் டிட்டோ, தீயணைப்புத்துறை அலுவலர் காளிதாஸ் கலந்து கொண்டனர்.

