/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேதமான ரோடுகள்... தண்ணீரில் கலக்கும் கழிவுநீர் இன்னல்களை சந்திக்கும் பழநி 30வது வார்டு மக்கள்
/
சேதமான ரோடுகள்... தண்ணீரில் கலக்கும் கழிவுநீர் இன்னல்களை சந்திக்கும் பழநி 30வது வார்டு மக்கள்
சேதமான ரோடுகள்... தண்ணீரில் கலக்கும் கழிவுநீர் இன்னல்களை சந்திக்கும் பழநி 30வது வார்டு மக்கள்
சேதமான ரோடுகள்... தண்ணீரில் கலக்கும் கழிவுநீர் இன்னல்களை சந்திக்கும் பழநி 30வது வார்டு மக்கள்
ADDED : மார் 21, 2025 04:23 AM

பழநி: நாய்கள் தொல்லை, தண்ணீர் குழாய்கள் உடைந்து சாக்கடை நீர் குடிநீரில் கலப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர் பழநி நகராட்சி 30 வது வார்டு மக்கள்.
பழநி நகராட்சியில் 30 வது வார்டு பகுதியில் மதனபுரம், குறவன்பாறை, அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளை கொண்டது. பக்தர்கள் அதிக அளவில் நடமாடும் பகுதியாக தற்போது இப்பகுதி மாறி உள்ளது. கிரிவீதி அடைக்கப்பட்ட பின் பக்தர்கள் வாகனங்கள் அதிக அளவில் மதனபுரம், அருள்ஜோதி வீதியில் பயணிக்க பயன்படுத்தப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது.
சுகாதாரக் கேடு
ஷோபா, அரசு பள்ளி ஆசிரியர், மதனபுரம்: எங்கள் பகுதியில் தண்ணீர் பைப் உடைந்து உள்ளது. அதில் சாக்கடை நீர் கலந்து செல்வதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. அப்பகுதியில் ரோடு முற்றிலும் சேதம் அடைத்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தண்ணீரில் சாக்கடை நீர் கலப்பது மட்டுமில்லாமல், கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது. டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. பாதாள சாக்கடை விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும்.
நாய்கள் தொல்லை
வடிவேலு, டீக்கடை உரிமையாளர், மதனபுரம்: எங்கள் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. குழந்தைகள், பெரியவர்கள் அச்சத்துடன் நடமாடும் சூழல் ஏற்படுகிறது. இங்கு பள்ளி மாணவர்கள் டியூசனுக்கு செல்கின்றனர். அவர்களை குறிவைத்து நாய்கள் துரத்தி கடிப்பதால் பெற்றோர்கள் டூவீலர்களில் கொண்டு விட்டுச் செல்லும் சூழல் ஏற்படுகிறது. எனவே நாய் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
ரோட்டோரங்களில் வாகனங்கள்
காளிதாஸ், வியாபாரி, மதனபுரம்: பக்தர்களின் வருகை எங்கள் பகுதியில் அதிக அளவு உள்ளது. வெளிநபர்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். ரோட்டோரங்களில் வாகனங்களை நிறுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். பார்க்கிங் வசதியை கோயில் நிர்வாகம் அதிகரித்து வழங்க வேண்டும்.
நடவடிக்கை எடுக்கப்படும்
விமல பாண்டியன், கவுன்சிலர், (தி.மு.க.,): எங்கள் பகுதியில் குப்பை இல்லாத பகுதியாக மாற்ற திட்டமிடலுடன் உள்ளது. நகராட்சியிடம் அனுமதி பெற்று அவற்றை செயல்படுத்த உள்ளேன். ரோடு வசதி, தண்ணீர் வசதி தானியங்கி முறையில் தெரு விளக்கு ஆகியவை அமைக்கப்பட்டது. பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளதால் குப்பை அதிகம் சேர்கிறது. போதுமான சுகாதார ஊழியர்கள் இல்லாத நிலையில் நகராட்சி இடம் கேட்டு சுகாதார ஊழியர்களை அதிகளவில் பெற்று சுகாதாரத்தை மேம்படுத்துகிறோம். ரூ.7 லட்சம் மதிப்பில் ரோடு அமைக்கப்பட உள்ளது. பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும். உடைந்த குழாய்கள் சரி செய்யப்படும். என்றார்.