/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேதமடைந்த ரோடுகள்: சர்வீஸ் ரோட்டில் குவியும் கழிவு: ஒட்டன்சத்திரம் நகராட்சி 1 வது வார்டு மக்கள் அவதி
/
சேதமடைந்த ரோடுகள்: சர்வீஸ் ரோட்டில் குவியும் கழிவு: ஒட்டன்சத்திரம் நகராட்சி 1 வது வார்டு மக்கள் அவதி
சேதமடைந்த ரோடுகள்: சர்வீஸ் ரோட்டில் குவியும் கழிவு: ஒட்டன்சத்திரம் நகராட்சி 1 வது வார்டு மக்கள் அவதி
சேதமடைந்த ரோடுகள்: சர்வீஸ் ரோட்டில் குவியும் கழிவு: ஒட்டன்சத்திரம் நகராட்சி 1 வது வார்டு மக்கள் அவதி
ADDED : ஜூலை 19, 2025 02:56 AM

ஒட்டன்சத்திரம், ஜூலை 19--
சேதமடைந்த ரோடுகளால் போக்குவரத்திற்கு சிரமம், சர்வீஸ் ரோட்டில் குவியும் குப்பையால் துர்நாற்றம் என ஒட்டன்சத்திரம் நகராட்சி 1 வது வார்டு மக்கள் அவதிக்கு ஆளாகின்றனர்.
குறிஞ்சிநகர், கூடலிங்கபுரம், பொன்னகரம், ஆத்துார், சீத்தப்பட்டி, தாராபுரம் ரோடு பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் தாராபுரம் ரோட்டில் இருந்து ஆத்துார் செல்லும் ரோட்டில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளுக்காக தோண்டப்பட்ட ரோடுகள் சீரமைக்கப்படாமல் இருப்பதால் வாகனங்கள் சென்றுவர சிரமமாக உள்ளது.
பொன்னகரம் பகுதியில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் மக்கள் அவதிக்கு ஆளாகின்றனர். இந்தப் பகுதிக்கு ஒட்டன்சத்திரம் துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூடலிங்கபுரம் வழியாக செல்லும் கழிவுநீர் ஓடை துார்வாரப்படாமல் இருப்பதால் செடிகள் முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது. ஓடையை தூர்வாரி தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும். குறிஞ்சிநகர் விரிவாக்க பகுதிகளில் தேவையான இடங்களில் குடிநீர், வடிகால், ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்.
மின்தடையால் சிரமம்
கே.சுரேஷ்குமார், அ.தி.மு.க., வார்டு செயலாளர், ஆத்துார்: தாராபுரம் ரோட்டில் இருந்து ஆத்துார் செல்லும் ரோடு சேதமடைந்துள்ளது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வார்டு பகுதியில் மின்சாரம் அடிக்கடி தடைபடுவதால் முதியோர்கள், குழந்தைகளுக்கு மிகவும் பாதிப்பு ஏற்படுகிறது. இப்பகுதியில் தேவையான இடங்களில் சாக்கடை அமைக்க வேண்டும். அடிக்கடி கொசு மருந்து அடிக்க வேண்டும்.
கழிவுகளை கொட்டுறாங்க
வி.ராமசாமி, பா.ஜ., நகர துணை தலைவர்: பைபாஸ் ரோடுப் பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. பாலத்தின் இரு பக்கமும் உள்ள சர்வீஸ் ரோட்டில் தெரு விளக்குகள் அமைக்க வேண்டும். அடிக்கடி கொசு மருந்து அடிக்க வேண்டும். கூடலிங்கபுரம் வழியாக செல்லும் ஓடை ,விருதுநகர் மேற்கு பகுதியில் செல்லும் ஓடையை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும்.
நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு
க.சாந்தி, கவுன்சிலர் (தி.மு.க.,): மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குறிஞ்சி நகரிலிருந்து சீத்தப்பட்டிக்கு புதிதாக ரோடு வேண்டும் என்பது அமைச்சரின் முயற்சியால் நிறைவேற்றப்பட்டுள்ளது ரூ.45 லட்சத்தில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. சாக்கடை பாலம் அமைக்கப்பட்டுள்ளது. குறிஞ்சி நகர் விரிவாக்க பகுதியில் ரோடு போடப்பட்டுள்ளது. பைபாஸ் ரோட்டுப் பகுதியில் இரவு நேரங்களில் இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். பைபாஸ் ரோட்டில் தெரு விளக்குகள் அமைக்க நெடுஞ்சாலைத்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அடிக்கடி ஏற்படும் மின் துண்டிப்பு பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றார்.