/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிதைந்த சிங்கிலிக்காம்பட்டி ரோடு; வாகன ஓட்டிகள் அவதி
/
சிதைந்த சிங்கிலிக்காம்பட்டி ரோடு; வாகன ஓட்டிகள் அவதி
சிதைந்த சிங்கிலிக்காம்பட்டி ரோடு; வாகன ஓட்டிகள் அவதி
சிதைந்த சிங்கிலிக்காம்பட்டி ரோடு; வாகன ஓட்டிகள் அவதி
ADDED : செப் 13, 2025 04:04 AM

வேடசந்துார்: அழகாபுரி நால்ரோடு முதல் சிங்கிலிக்காம்பட்டி வரை செல்லும் தார் ரோடு சேதமடைந்துள்ளதால் இப்பகுதி மக்கள் கடும் போக்குவரத்து சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
வேடசந்துார் கூம்பூர் ரோட்டில் அழகாபுரி அடுத்துள்ள நால்ரோட்டில் இருந்து சிங்கிலிக்காம்பட்டி வரை செல்லும் 3 கி.மீ., தார் ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. வேடசந்துார் கரூர் நெடுஞ்சாலை காசிபாளையத்திலிருந்த, கருதி கவுண்டன்பட்டி, சிங்கிலிக்காம்பட்டி, பூனுாத்து, அய்யா கவுண்டனுார், கல்லுப்பட்டி உள்ளிட்ட சுற்றுப்பகுதி மக்கள் அழகாபுரி வாரச்சந்தை,கோவிலுார் வாரச் சந்தை செல்ல வேண்டுமாயின் இந்த வழித்தடத்தில் தான் செல்ல வேண்டும்.
அழகாபுரி நால் ரோட்டில் இருந்து செல்லும் 3 கிலோமீட்டர் தார் ரோடு மெட்டல் ரோடு ஆக மாறிப் போனதால் இவ்வழித்தடத்தில் நடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், நுாற்பாலை வாகனங்கள், டூவீலரில் விவசாய உற்பத்தி பொருட்களை எடுத்து செல்லும் விவசாயிகள் என பல்வேறு தரப்பு மக்களும் பாதிக்கின்றனர். அழகாபுரி நால்ரோடிலிருந்து வேடசந்துார் கரூர் ரோடு செல்ல வேண்டிய மக்கள் இந்த ரோடு மிக சேதத்தால் அழகாபுரி சென்று சுற்றிச் செல்கின்றனர். இல்லையேல் கூம்பூர் சென்று சுற்றி செல்கின்றனர். இப்பகுதியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் போக்குவரத்து வசதிக்கான இந்த ரோட்டை மீண்டும் புதுப்பித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
நடப்பதற்கே சிரமம் எம்.பிரேம்குமார், சமூக ஆர்வலர், அழகாபுரி: தார் ரோடானது 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டதாகும். தற்போது வழி நெடுகிலும் கற்கள் பெயர்ந்து நடப்பதற்கே பயனற்று மெட்டல் ரோடு போல் காட்சியளிக்கிறது. இவ்வழித்தடத்தில் தான் ஏராளமான பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் தினமும் வந்து செல்கின்றனர். கோவிலுார் பகுதியில் இருந்து வேடசந்துார் கரூர் ரோட்டில் உள்ள நுாற்பாலைகளுக்கு செல்ல வேண்டிய வாகனங்களும் இந்த வழித்தடத்தில் தான் செல்கின்றன. அனைத்து தரப்பு மக்களின் நலன் கருதி ரோடை புதுப்பிக்க வேண்டும்.
தேவை மேம்பாலம் எம்.ஆறுமுகம், மளிகை ஸ்டோர், அழகாபுரி: பாலப்பட்டி ஊராட்சி, கல்வார்பட்டி ஊராட்சியின் இணைப்பு ரோடான இவ்வழித்தடத்தில்தான் இரு ஊராட்சி மக்கள் மட்டுமின்றி கோவிலுார், குளத்துப்பட்டி ஊராட்சியில் இருந்தும் ஏராளமான வாகனங்கள், நுாற்பாலை வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த ரோட்டின் குறுக்கே சிற்றோடை ஒன்று குறுக்கிடுவதால் மேம்பாலம் அவசிய தேவையாக உள்ளது. சுற்றுப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதிக்கான இந்த ரோட்டை சட்டசபை தேர்தல் முன் விரைந்து புதுப்பிக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.