/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேதமடைந்த தெரு ரோடுகள்... சீரமைக்கப்படாத கழிவுநீர் கால்வாய் சிரமத்தில் ஒட்டன்சத்திரம் 17வது வார்டு
/
சேதமடைந்த தெரு ரோடுகள்... சீரமைக்கப்படாத கழிவுநீர் கால்வாய் சிரமத்தில் ஒட்டன்சத்திரம் 17வது வார்டு
சேதமடைந்த தெரு ரோடுகள்... சீரமைக்கப்படாத கழிவுநீர் கால்வாய் சிரமத்தில் ஒட்டன்சத்திரம் 17வது வார்டு
சேதமடைந்த தெரு ரோடுகள்... சீரமைக்கப்படாத கழிவுநீர் கால்வாய் சிரமத்தில் ஒட்டன்சத்திரம் 17வது வார்டு
ADDED : ஆக 09, 2025 03:39 AM

ஒட்டன்சத்திரம்: குழாய்கள் அமைக்கும் பணிக்காக சேதப்படுத்தப்பட்ட தெருக்களில் வாகனங்களை இயக்க சிரமம், சீரமைக்கப்படாத சாக்கடைகளால் அவதி என ஒட்டன்சத்திரம் நகராட்சி 17வது வார்டு மக்கள் பரிதவிக்கின்றனர்.
ஒட்டன்சத்திரம் நகராட்சி 17 வது வார்டில் காந்திநகர் மற்றும் பட்டாளம்மன் கோயில் தெரு உள்பட பல்வேறு பகுதிகள் உள்ளன.
வார்டில் உள்ள பல தெருக்களில் கழிவு நீர் கால்வாய் சிறிதாக இருப்பதால் சாக்கடை தேங்கி உள்ளது. பிளாஸ்டிக் கழிவுகள் கழிவுநீர் கால்வாயில் விழுந்து சாக்கடையை அடைத்துக் கொள்வதால் துர்நாற்றம் வீசுகிறது.
இதனை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வார்டு மக்கள் ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் மற்றும் கடைவீதிக்கு செல்வதற்கு ரயில் பாதையை கடந்து செல்ல வேண்டும். இதற்காக ரயில்வே ஸ்டேஷன் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் ரயில்வே சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேற்குப் பகுதி சுரங்கப்பாதை மேற்கூரை அமைக்கப்பட்டு மழை காலத்திலும் பயன்படுத்தும் படி உள்ளது. இதேபோல் கிழக்கு பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையையும் மாற்றி அமைக்க வேண்டும்.
ரோடுகளை சீரமைக்க வேண்டும். சுரேஷ் குமார், நுகர்வோர் ஆர்வலர், காந்திநகர்: இந்த வார்டில் உள்ள சுகாதார வளாகம் நீண்ட நாட்களுக்கு பிறகு பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இதனால் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவது குறைந்துள்ளது.
கிழக்கு பகுதியில் உள்ள சப்வேக்கு மேற்கூரை அமைத்து மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது.
குடிநீர் குழாய் அமைப்பதற்காக ரோடுகள் தோண்டப்பட்டதால் சேதமடைந்து காணப்படுகிறது.
இதனை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாக்கடையை அகலப்படுத்த வேண்டும் சாய்மணி, பா.ஜ., நகர துணைத் தலைவர், ஒட்டன்சத்திரம்: துப்புரவு தொழிலாளர்கள் வரும்போது வெளியே சென்றவர்கள் வீட்டில் உள்ள குப்பையை ஆங்காங்கே கொட்டி விடுகின்றனர். இதனைப் போக்க குப்பை தொட்டி வைக்க வேண்டும்.
தெருக்களில் உள்ள சாக்கடைகள் அரைகுறையாக தூர்வாரப்படுகிறது.
நன்றாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீர் வாய்க்காலை அகலப்படுத்தி பெரிதாக கட்ட வேண்டும்.
வார்டுக்குள் அடிக்கடி கொசு மருந்து அடிக்க வேண்டும். நாய்கள் தொல்லையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சீரமைக்கப்படும் மகாராணி, கவுன்சிலர் (தி.மு.க.,): பட்டாளம்மன் கோயில் தெருவில் மேலே இருந்து நான்கு இடங்களில் சிறு பாலங்கள் கட்டப்பட்டுள்ளது.
காவிரி கூட்டுக் குடிநீர் குழாய்கள் அமைத்தவுடன் தெரு ரோடுகள் சீரமைக்கப்படும். கழிவுநீர் வாய்க்கால்கள் சீரமைக்கப் படும்.
இந்த வாரில் கட்டப்பட்டு பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்த கழிப்பறையை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப் பட்டுள்ளது.