ADDED : பிப் 19, 2025 03:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை, : வடமதுரை பேரூராட்சி பகுதிக்குரிய வி.ஏ.ஓ., அலுவலகம் பஸ் ஸ்டாப் அருகில் செயல்பட்டது. ஓடுகளாலான கூரை கொண்ட இக்கட்டடம் மிகவும் பழமையானது. 2007ல் பெய்த கனமழையால் கட்டடத்தின் ஒரு பகுதியிருந்த சுவர் சரிந்தது. இதனால் வி.ஏ.ஓ., அலுவலகம் வடக்கு ரத வீதியில் இருக்கும் வருவாய் ஆய்வாளர் குடியிருப்பிற்கு மாற்றப்பட்டது.
இதனால் வருவாய்த்துறையினரும், பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு புதிய கட்டடம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

