/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேதமான நீர்வரத்து கால்வாய்களில் மராமத்து பணி செய்யலாமே! வெயில் காலத்தில் பணி தொடங்குவது அவசியம்

ADDED : மே 06, 2024 01:01 AM

மாவட்டத்தில் கண்மாய்கள், குளங்கள் அதிகம் உள்ளன. இவற்றில் பல நீர்நிலைகளுக்கு மழைக்காலத்தில் நீரைக் கொண்டு வரும் நீர்வரத்து கால்வாய்கள் புதர் மண்டியும், சேதமடைந்தும் காணப்படுகிறது.
பல குளங்கள் துார்வாரப்படாமல் உள்ளது. இவற்றில் பல தடுப்புச் சுவர்கள் இடிந்து விழுந்து சீரமைக்கப்படாமல் உள்ளது. இவற்றின் அருகிலேயே ரோடுகள் உள்ளன.
தடுப்பு சுவர் இல்லாததால் கவனம் இன்றி ஓட்டப்படும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் கன மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் தடுப்பு சுவர்கள் உடைந்து விழும் வாய்ப்பு உள்ளது. இதே போல் மாவட்டத்தில் உள்ள துார்வாரப்படாத குளங்களை துார்வாரி சுத்தம் செய்வதன் மூலம் நீர்த்தேக்கும் கொள்ளளவை அதிகரிக்க வேண்டும்.
தண்ணீரை அதிகமாக தேக்குவதன் மூலம் கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க முடியும். குளங்களின் அக்கம் பக்கங்களில் உள்ள விவசாய கிணறுகளுக்கு நீர்வரத்து ஏற்படுவதின் மூலம் வேளாண் தொழில் சிறக்க வாய்ப்பு உள்ளது.
மாவட்ட நிர்வாகம் இத்தகைய நீர்வரத்து கால்வாய்கள், ஓடைகள், குளங்களை கண்டறிந்து துார்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.