/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேதம்...நோய் தொற்று அபாயம் சிக்கலுக்கு மத்தியில் பழநி 29 வார்டு
/
சேதம்...நோய் தொற்று அபாயம் சிக்கலுக்கு மத்தியில் பழநி 29 வார்டு
சேதம்...நோய் தொற்று அபாயம் சிக்கலுக்கு மத்தியில் பழநி 29 வார்டு
சேதம்...நோய் தொற்று அபாயம் சிக்கலுக்கு மத்தியில் பழநி 29 வார்டு
ADDED : ஜூலை 03, 2025 04:22 AM

பழநி: பழநி நகராட்சி 29 வது வார்டில் சாக்கடைகள் முறையாக கட்டப்படாததால் கழிவுநீர் வெளியேறாமல் துர்நாற்றம் வீசுகிறது.
பழநி நகராட்சி 29 வது வார்டு பகுதியில் சிங்கப்பெருமாள் கோனார் சந்து, பாரதி நகர், ராஜகுரு வீதி, சுபதேவ்வீதி, பொன்நகர், ஆண்டவர் பூங்கா ரோடு ஆகியவற்றை உள்ளடக்கியது. இதில் சுபதேவ் வீதி மற்றும் சில பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட சாக்கடை கழிவு நீர் வெளியேறாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சாக்கடை நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரத் கேடு ஏற்படுகிறது.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
கார்த்திகேயன், வணிகர், சிங்கப்பெருமாள் கோனார் சந்து: ஆண்டவன் பூங்கா ரோட்டில் தற்போது பக்தர்களின் வருகை அதிகம் உள்ளது. ரோட்டோரத்தில் உள்ள நடைபாதையில் பொதுமக்கள் அசுத்தம் செய்து வருகின்றனர். மேலும் நடைமேடையில் சாக்கடை ஸ்லாப்புகள் அகற்றப்பட்டு உள்ளன. இதனால் இரவு நேரத்தில் அப்பகுதியில் நடக்கும் மனிதர்கள், விலங்குகள் தவறி அதனுள் விழுந்து விடும் நிலை உள்ளது. எனவே நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாய் தொல்லை
மதுரை வீரன், தனியார் ஊழியர், சுபதேவ் வீதி: சுபதேவ் வீதியில் சாக்கடை புதிதாக அமைக்கப்பட்டு தண்ணீர் வெளியேறாத வகையில் உள்ளது. இதனை சரி செய்ய வேண்டும். தெருவில் நாய் தொல்லை அதிகம் உள்ளது. குழந்தைகள் முதியவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. பள்ளி குழந்தைகள் செல்லும் ரோடுகள் சேதமடைந்துள்ளன. அங்கு சாக்கடை சேதமடைந்துள்ளதால் நோய் தொற்று அபாயம் குழந்தைகளுக்கு ஏற்படும் நிலை உள்ளது. குப்பைகள் முறையாக அகற்றப்பட வேண்டும்.
சரிவர பணிகள் முடிக்கவில்லை.
ஆறுமுகம், கவுன்சிலர் (அ.தி.மு.க) : குப்பைகளை அகற்ற நகராட்சியிடம் சுகாதார பணியாளர்கள் போதுமான அளவு இல்லை. இதனால் பணிகள் சுணக்கம் அடைகிறது. சுபதேவ் வீதியில் சாக்கடை கால்வாய் சரிவான அமைப்பில் கட்டப்படாமல் உள்ளது. இதுகுறித்து ஏற்கனவே நகராட்சியில் சாக்கடை கட்டிய போது தெரிவித்திருந்த நிலையில் சரிவர பணிகள் முடிக்கப்படவில்லை. நீர் தேங்கி துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் எங்கள் வார்டு பகுதியில் பெரும்பாலான சாலைகள் அமைக்கப்பட வேண்டும். நாய் தொல்லை அதிகம் உள்ளது. இதை அனைத்தும் நகராட்சி நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றார்