sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நீர் நிலைகளில் கழிவுநீர் ,குப்பை கொட்டுவதால் பேராபத்து ; நிலத்தடி நீருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் அபாயம்

/

நீர் நிலைகளில் கழிவுநீர் ,குப்பை கொட்டுவதால் பேராபத்து ; நிலத்தடி நீருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் அபாயம்

நீர் நிலைகளில் கழிவுநீர் ,குப்பை கொட்டுவதால் பேராபத்து ; நிலத்தடி நீருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் அபாயம்

நீர் நிலைகளில் கழிவுநீர் ,குப்பை கொட்டுவதால் பேராபத்து ; நிலத்தடி நீருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் அபாயம்

1


ADDED : அக் 26, 2025 07:26 AM

Google News

ADDED : அக் 26, 2025 07:26 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம் : திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள், நீர் வரத்து கால்வாய்கள், கழிவு நீர் கால்வாய்களில் குப்பை கொட்டப்படுவதால் ஏகப்பட்ட பிரச்னைகள் உருவாகிறது. இவற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம் இருப்பதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்புக்கு ஆளாகிறது.

மாவட்டத்தில் குளங்கள், சிறு குளங்கள், ஓடைகள் அதிகம் உள்ளன. இந்த நீர்நிலைகள் ,நீர் வரத்து கால்வாய்கள், கழிவு நீர் கால்வாய்கள் ஆகியவற்றில் குப்பை கொட்டுவது அதிகரித்து வருகிறது. இவற்றால் சுற்றுச்சூழல், பூமி மாசடைகிறது. மக்கும் குப்பையுடன் சேர்த்து மக்கா பிளாஸ்டிக் கழிவுகளும் கொட்டப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதுடன் நீரின் தன்மையும் மாறுபாடு அடைகிறது. கழிவு நீர் கால்வாயில் கொட்டப்படும் குப்பை கழிவு நீர் செல்ல முடியாமல் தடுப்பதால் தேக்கமடைகிறது. நாளடைவில் இவற்றில் இருந்து கொசுக்கள், பூச்சிகள் உற்பத்தி அதிகரித்து நோய் பரப்பும் அபாயம் உள்ளது. இதனால் இப்பகுதியில் குடியிருப்போர் அவதிக்கு ஆளாகின்றனர். நீர் வரத்து கால்வாய்களில் கொட்டப்படும் குப்பையால் மழைக்காலத்தில் மழை நீர், நீர் நிலைக்கு செல்ல முடியாமல் தடை ஏற்படுத்துகிறது. நீர் நிலைகள் அருகில் குப்பை கொட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

............

நீர்மட்டத்திற்கு பாதிப்பு

மாவட்டத்தில் நீர்நிலைப் பகுதிகளில் குப்பை கொட்டுவதால் குளம் குட்டைகளுக்கு செல்லும் நீர் வழித்தடங்கள் அடைக்கப்படுகின்றன. பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம் கொட்டப்படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. கழிவு நீர் கால்வாய்களில் கொட்டப்படும் குப்பை கழிவு நீரை தேக்குவதால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரப்பும் முக்கிய காரணியாக அமைகிறது. கழிவு நீர் கால்வாய்களை அவ்வப்போது துார்வாரினால் கழிவு நீர் தேங்காது. நீர்நிலை பகுதிகளில் குப்பை கொட்டாமல் இருப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சிவக்குமார், பா.ஜ., மாநில பொதுக்குழு உறுப்பினர்,ஒட்டன்சத்திரம்

...






      Dinamalar
      Follow us