/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தமிழக அரசு நினைத்தால் சி.பி.எஸ்.,ஐ ஒரு மணி நேரத்தில் ரத்து செய்யலாம் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பேச்சு

ADDED : அக் 27, 2025 12:43 AM
திண்டுக்கல்: ''-தமிழக அரசு நினைத்தால் (பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்) சி.பி.எஸ்.,ஐ ஒரு மணி நேரத்தில் ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமுல்படுத்த முடியும்,'' என, திண்டுக்கல்லில் நடந்த சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜராஜேஸ்வரன் பேசினார்.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன் பேசியதாவது: தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
நான்கரை ஆண்டுகால தி.மு.க., ஆட்சியில் அதற்கான எந்த முயற்சியிலும் அரசு ஈடுபடவில்லை. கூடுதல் தலைமைச் செயலர் ககன்தீப்சிங் பேடி தலைமையிலான அலுவலர் குழு, முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதிப்படி செப்., 30 க்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. இடைக்கால அறிக்கை யாரிடம் தாக்கல் செய்யப்பட்டது என்ற விவரமும் வெளியிடப்படவில்லை.
சி.பி.எஸ்., திட்டத்தில் இணைந்து பணியின்போது உயிரிழந்த 8 ஆயிரம் பேரது குடும்பத்தினர், ஓய்வுப்பெற்ற ஊழியர்கள் 48 ஆயிரம் பேர் பணிக்கொடை, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 ஆண்டுகளாக அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ஓய்வூதிய நிதி தமிழக அரசிடம் உள்ளது.
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு, ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று, மேம்பாட்டு ஆணையத்திடம் முன் அனுமதிப் பெற வேண்டிய அவசியம் இல்லை. தமிழக அரசு நினைத்தால் ஒரே மணி நேரத்தில் சி.பி.எஸ்.,ஐ ரத்து செய்யமுடியும். இதை வலியுறுத்தி சென்னையில் நவ., 22ல் பேரணி நடத்தப்படும். இவ்வாறு பேசினார்.
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பிரெடெரிக் எங்கெல்ஸ், செல்வகுமார், கண்ணன், அரசு உதவிப்பெறும் கல்லூரி அலுவலர்கள் சங்க மதுரை மண்டலத் தலைவர் வீரவேல் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.