/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சமூக நீதியை காலில் போட்டு மிதிக்கும் ஆட்சி புதிய தமிழகம் கிருஷ்ணசாமி காட்டம்

ADDED : அக் 27, 2025 12:57 AM

வத்தலக்குண்டு: தமிழகத்தில் சமூக நீதி ஆட்சி நடக்கிறது என பெருமை பேசிக்கொள்ளும் தி.மு.க., அரசு சமூக நீதியை காலில் போட்டு மிதித்துள்ளது என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.
வத்தலக்குண்டில் அவர் அளித்த பேட்டி: 2026 சட்டசபை தேர்தலையொட்டி மதுரை மாநாடு நடத்தப்படுவதால் புதிய தமிழகம் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்து கோடிட்டு காட்டப்படும். பணத்திற்கு ஓட்டுப்போடக்கூடாது என மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மது போன்ற சமூக தீமைகளை ஒழிக்கவேண்டும்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற்றால் தான் ஜாதி, மத, இன பாகுபாடு இல்லாமல் பணிபுரிய முடியும். மக்களுக்கு சேவை செய்யக்கூடிய ஆட்சி அமைக்கவேண்டும்.
தமிழக மக்களுக்கு உண்மையாக பாடுபடக்கூடிய கட்சியை கண்டறிந்து இணைவோம். தமிழகத்தில் சமூகநீதி பேசுகிறார்கள்.
நிலக்கோட்டை எம்.எல்.ஏ., தேன்மொழி உட்பட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் சுதந்திரமாக செயல்படமுடியாதநிலை தான் உள்ளது.
சமூக நீதி ஆட்சி நடைபெற்று வருகிறது என நாளுக்கு நாள் பெருமை பேசிக்கொள்ளும் தி.மு.க., அரசு சமூக நீதியை காலில் போட்டு மிதித்துள்ளது.
2026ல் கூட்டணி ஆட்சிதான் அமையும். தனித்து எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது.