/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேதமான மின்கம்பத்தால் காத்திருக்கு ஆபத்து...
/
சேதமான மின்கம்பத்தால் காத்திருக்கு ஆபத்து...
ADDED : டிச 30, 2024 06:17 AM

அச்சுறுத்தும் நாய்கள் : திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் சுற்றி திரியும் நாய்களால் பாதசாரிகள் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். அச்சுறுத்தலாக உள்ளதால் கடந்து செல்ல சிரமப்படுகின்றனர். நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
--சுரேஷ், ரவுண்ட் ரோடு.
--------
சேதமான மின்கம்பம் : திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி ரோட்டில் மின்கம்பம் சேதமடைத்து ஆபத்தான நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் முறியும் நிலையில் உள்ளதால் அதிகாரிகள் இதன்மீது கவனம் செலுத்த வேண்டும். மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.
-கருப்பையா, செட்டிநாயக்கன்பட்டி.----------
ஆபத்தை ஏற்படுத்தும் வடிகால் மூடி : திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மனு கொடுக்க செல்லும் வழியில் மழைநீர் வடிகால் மூடி சேதமடைந்த பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கார்த்திகேயன், திண்டுக்கல்.----------
செடிகள் முளைத்த தண்ணீர் தொட்டி : ஒட்டன்சத்திரம் நகராட்சி 3வது வார்டு சங்குபிள்ளைபுதுார்- அத்திக்கோம்பை ரோட்டில் மேல்நிலைத் தொட்டி செடிடிகள் முளைத்து பயனற்ற நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் தண்ணீர் பிடிக்க செல்ல மக்கள் அச்சமடைகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-
-ஆறுமுகம் ஒட்டன்சத்திரம்.
-------
குப்பையால் உருவாகும் சீர்கேடு : பழநி நேதாஜி நகர் 13 வது குறுக்கு தெருவில் பல நாட்களாக குப்பை அள்ளாமல் குவிந்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. நோய் பரவும் அபாயம் உள்ளதால் குப்பையை அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-ராஜேஸ்வரி, பழநி.---------
சேதமான ரோடால் அவதி : திண்டுக்கல் நத்தம் ரோடு சாணார்பட்டி மேட்டு கடையில் ரோடு சேதம் அடைந்துள்ளது. இதனால் விபத்து நடக்கிறது. அதிக வானங்கள் செல்வதால் இரவு நேரங்களில் விபத்து நடக்கிறது. சேதமான ரோடை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தர்ஷன்,மேட்டுக்கடை.----------
கழிவுநீரால் பரவும் தொற்று : திண்டுக்கல் -தாடிக்கொம்பு ரோட்டில் சாக்கடை கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. கழிவுநீர் தேங்குவதால் பாதாசாரிகள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். கழிவுநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முத்துக்குமார், திண்டுக்கல்.----------