மகளிர் தின விழா
திண்டுக்கல் :கூட்டுறவு நகர் மகளிர் குழவினர் சார்பில் செல்வ விநாயகர் கோயில் வளாகத்தில் மகளிர் தின விழா கொண்டாட்டப்பட்டது.மகளிர் குழு திராவிடராணி தலைமை வகித்தார். கணவன்-மனைவி வாழ்வியல் பற்றி பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டுபரிசுகள் வழங்கப்பட்டன. துணைத் தலைவர் ஏகம்மை, செயலாளர்அமரசுந்தரி, பொருளாளர் சசிகலா, கவுரவத் தலைவர் ரமா செய்தனர்.
செயல் விளக்க முகாம்
ரெட்டியார்சத்திரம்: வேடசந்துார் எஸ்.ஆர்.எஸ்., வேளாண் கல்லுாரி மாணவியர், ரெட்டியார்சத்திரம் பகுதியில் கிராம வேளாண் பணி அனுபவ திட்டத்தில் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம்களை நடத்தி வருகின்றனர். கொத்தப்புள்ளி கிராமத்தில் பருத்தி சாகுபடி நுட்பங்கள் குறித்த பயிற்சி முகாம் நடத்தினர். மாணவிகள் அஸ்வதிபிரியா , அமிர்தா, அருணா, அஸ்மின் சோபியா, அஸ்வினி, அஸ்வதிப்பிரியா, பாரதி பிரியா, புவனேஸ்வரி, தானியா ஆலோசனை வழங்கினர்.
தி.மு.க., நீர் மோர் பந்தல் திறப்பு
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் மத்திய ஒன்றியம் தி.மு.க., சார்பில் அம்பிளிக்கை,தங்கச்சியம்மாபட்டி ஊராட்சிகளில் அமைச்சர் சக்கரபாணி ஆலோசனையின் படி நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி திறந்து வைத்தார். ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர்.கே பாலு, அவைத்தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர் கே.வி. முருகானந்தம், சிவா, சிவபாக்கியம் ராமசாமி, மாவட்ட பிரதிநிதிகள் சண்முகம், சத்தியம், சக்திவேல், இளைஞர் அணி முத்து, ஈஸ்வரன் சின்னத்துரை மாயகிருஷ்ணன் ரவி, முருகன் ஆனந்த் கலந்து கொண்டனர்.