/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தண்ணீர் தேடி வந்த கடமான் இறப்பு
/
தண்ணீர் தேடி வந்த கடமான் இறப்பு
ADDED : மார் 17, 2024 05:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே தனியார் தோட்டம் ஒன்றில் தண்ணீர் தேடி வந்த ஆண் கடமான் இறந்கு கிடந்தது.
ஒட்டன்சத்திரம் வனப்பகுதியில் ஏராளமான மான்கள், யானைகள் பன்றிகள் உள்ளன.
இவை அவ்வப்போது தண்ணீர் தேடி மலைஅடிவாரப் பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு வந்து விடும். நேற்று குழந்தை வேலப்பர் கோயில் அருகே உள்ள தோட்டம் ஒன்றில் ஆறு வயது ஆண் கடமான் இறந்து கிடந்தது.
ஒட்டன்சத்திரம் வனச்சரகர் ராஜா, வனவர் இளங்கோவன் விசாரணை நடத்தினர். விருப்பாச்சி கால்நடை மருத்துவ அலுவலர் சரவணபவா ஆய்வுக்கு பின் வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.

