/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அருங்காட்சியகத்தில் பேச்சுப்போட்டி
/
அருங்காட்சியகத்தில் பேச்சுப்போட்டி
ADDED : டிச 13, 2025 05:46 AM
பழநி: பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு பழநி அருங்காட்சியகத்தில் நடந்த கல்லுாரி மாணவிகளுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பழநி அடிவாரம் சன்னதி வீதியில் மாவட்ட அருங்காட்சியகம் செயல்படுகிறது. பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு கல்லுாரி மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி காப்பாட்சியர் சசிகலா தலைமையில் நடைபெற்றது.
30-க்கு மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். பேச்சுப் போட்டியில் பழநியாண்டவர் மகளிர் கலைக்கல்லுாரி தமிழ் துறை மாணவி சையது ரபியா முதல் பரிசு, தமிழ்மணி இரண்டாம் பரிசு, திண்டுக்கல் எஸ்.எஸ்.எம். கல்லுாரி கணினி அறிவியல் துறை மாணவி அமலா ஜெனோ மூன்றாம் பரிசு பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவிகளை அருங்காட்சியக காப்பாட்சியர், ஊழியர்கள், கல்லுாரி பேராசிரியர்கள் பாராட்டினர்.

