/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நேதாஜி பிறந்த நாளை தேசபக்தி தினமாக அறிவியுங்க பார்வர்டு பிளாக் வலியுறுத்தல்

ADDED : ஜன 20, 2024 05:19 AM
திண்டுக்கல்: ''நேதாஜியின் 126வது பிறந்தநாளை மத்திய, மாநில அரசுகள் தேசபக்தி தினமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென,'' அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில பொதுச்செயலர் கர்ணன் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: பிப்.,ல் தமிழகத்தில் நடைபெற இருக்கும் மாநில இளைஞரணி மாநாடு சிறப்பாக நடத்தப்படும்.
லோக்சபா தேர்தலில் ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டால் பார்வர்டு பிளாக் சார்பாக அங்கு வேட்பாளர் நிறுத்தப்படும் என்றார்.
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ் மாநில குழு, அனைத்து மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் கூட்டம் நடந்தது.
தனியார் ஓட்டலில் நடந்த இதில் மாநில பொதுச் செயலாளர் கர்ணன் தலைமை வகித்தார்.
பொருளாளர் சுரேஷ், செயலாளர்கள் திண்டுக்கல் ஜெயராம், சுப்புராஜ், காளிமுத்து முன்னிலை வகித்தனர்.
தேனி மாவட்ட செயலாளர் சக்கரவர்த்தி, திருப்பூர் மாவட்ட தலைவர் தாமோதரன், செயலாளர் காளிமுத்து, திண்டுக்கல் மாவட்ட தலைவர் பால்பாண்டி, செயலாளர் சீனிவாசன், இளைஞரணி செயலாளர் சேனாதிபதி மணி, நகர செயலாளர் இளஞ்செழியன் பங்கேற்றனர்.