/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அங்கன்வாடி பணியில் தாமதம்: நெரிசலால் அவதி; பெரும் சிரமத்தில் பழநி 23வது வார்டு மக்கள்
/
அங்கன்வாடி பணியில் தாமதம்: நெரிசலால் அவதி; பெரும் சிரமத்தில் பழநி 23வது வார்டு மக்கள்
அங்கன்வாடி பணியில் தாமதம்: நெரிசலால் அவதி; பெரும் சிரமத்தில் பழநி 23வது வார்டு மக்கள்
அங்கன்வாடி பணியில் தாமதம்: நெரிசலால் அவதி; பெரும் சிரமத்தில் பழநி 23வது வார்டு மக்கள்
ADDED : செப் 18, 2025 06:16 AM

பழநி : அங்கன்வாடி பணியில் தாமதம், போக்குவரத்து நெரிசலால் தினமும் அவதி என பழநி நகராட்சி 23 வது வார்டு மக்கள் பாதிக்கின்றனர்.
அசாஸ் ராவுத்தர் சந்து, காஜிமார் தெரு, காந்தி ரோடு மார்க்கண்டேயன் வீதி, பத்மநாபன் சந்து, ரங்கநாதன் சந்து, சிதம்பரம் சந்து, துளுவ வேளாளர் சந்து உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் உள்ள காந்தி ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதால் அவற்றை சரி செய்ய வேண்டும்.
குடிநீர் தேவைகளை சரிவர பூர்த்தி செய்ய வேண்டும். கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும். காந்தி ரோடு பகுதியில் போக்குவரத்து நெரிசலால் இப்பகுதி மக்கள் பாதிப்பினை சந்திக்கின்றனர். இதை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துரத்தும் நாய்கள் மகாலட்சுமி, குடும்பத்தலைவி, பத்மநாபன் சந்து: தெரு நாய் தொல்லை அதிக அளவில் உள்ளது இதனை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகள் ,முதியவர்கள் சிரமத்துடன் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. டூவீலரில் செல்வோரை துரத்தி கடிக்கிறது. நகராட்சி நிர்வாகம் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் தினமும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாமதமாகும் அங்கன்வாடி பணி அப்துல் அஜீஸ், டீக்கடை உரிமையாளர், பத்மநாபன் சந்து: காந்தி ரோட்டில் போக்குவரத்து இடையூறால் மக்கள் தினமும் பாதிப்பதால் இதனை சரி செய்ய வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
அங்கன்வாடி மைய கட்டட பணிகளை துரிதப்படுத்தி விரைவில் கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை எடுக்கப்படும் உமா மகேஸ்வரி, நகராட்சி தலைவர் (தி.மு.க.,) : உள்ளாட்சி தேர்தலின் போது அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நுாறு சதவீதம் நிறைவேற்றப் பட்டுள்ளது.
தற்போது அங்கன்வாடி கட்டட பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் பணிகள் நிறைவு செய்யப்படும். பாதாள சாக்கடை திட்டம் துவங்கப்பட்டு மற்ற வார்டுகளில் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த வார்டிலும் நிறைவேற்றப்படும்.
நாய் தொல்லை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். காந்தி ரோட்டில் போக்குவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.