/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தவணை கட்ட தாமதம்; வீட்டை பூட்டிய வங்கி ஊழியர்
/
தவணை கட்ட தாமதம்; வீட்டை பூட்டிய வங்கி ஊழியர்
ADDED : மார் 03, 2024 06:28 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே வங்கியில் பெற்ற கடன் தவணையை கட்ட தாமதமானதால் வங்கி ஊழியர் வீட்டைப் பூட்டிச் சென்றது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.
திண்டுக்கல் பெரிய பள்ளபட்டியைச் சேர்ந்தவர் முருகன். தோல் தொழிற்சாலையில் பணியாற்றும் இவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு கார்மன்ஸ் தொழில் தொடங்க தனியார் வங்கியில் ரூ.6.50 லட்சம் கடன் பெற்றார். மாதந்தோறும் 18,400 வீதம் கட்டி வந்துள்ளனர். தவணை கட்ட தாமதமானது. வீட்டிற்கு வந்த வங்கி ஊழியர் தவணைத் தொகை கேட்டுள்ளார். கணவன் இல்லாமல் மனைவி முருகாயி மட்டுமே வீட்டிலிருந்த நிலையில் ஓரிரு தினங்களில் கட்டி விடுகிறோம் என தெரிவித்துள்ளார். வங்கி ஊழியர் வீட்டில் இருந்தவர்களை வெளியேற்றி வீட்டைப் பூட்டிச் சென்றார். செய்வதறியாது தவித்த இவர்கள் பணத்தை தயார் செய்து தவணையை கட்டி உள்ளனர். தாலுகா போலீசர் வங்கி ஊழியர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

