/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கூட்டுறவு சொசைட்டிகளில் யூரியா விநியோகம் தாமதம்
/
கூட்டுறவு சொசைட்டிகளில் யூரியா விநியோகம் தாமதம்
ADDED : அக் 22, 2025 12:34 AM
விவசாயிகள் பாதிப்பு
குஜிலியம்பாறை அக்.22- --: குஜிலியம்பாறை சுற்றுப்பகுதிகளில் மானாவாரி விவசாயமாக எள்ளு, நிலக்கடலை, துவரை, சோளம் உள்ளிட்டவற்றை பயிரிட்டுள்ளனர். தற்போது சோளப் பயிர்கள் 2 அடி உயரம் வரை வளர்ந்துள்ள நிலையில் யூரியா போட்டால்தான் போதுமான தீவனப் பயிராக வளர்ச்சி பெறும்.
இல்லா விட்டால் இரண்டடி உயரத்திலே தனது வளர்ச்சியை நிறுத்திக் கொள்ளும். கூட்டுறவு சொசைட்டிகளில் யூரியா விநியோகம் இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளனர்.
விவசாயிகள் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் ஏ.ராஜரத்தினம் கூறுகையில், ''கருங்கல் சுற்றுப்பகுதியில் 800 ஏக்கருக்கு மேல் சோள பயிர்கள் பயரிட்டுள்ளனர். இரண்டு மாதங்கள் ஆன நிலையில் தற்போது யூரியா போட வேண்டும். யூரியா விநியோகம் கூட்டுறவு சொசைட்டிகளில் இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள னர்.
விவசாயிகளின் நலன் கருதி கூட்டுறவு சொசைட்டிகளில் போதிய யூரியா மூடைகளை கையிருப்பில் வைக்க வேண்டும் என்றார்.