ADDED : பிப் 06, 2025 12:22 AM

கொடைக்கானல்; கொடைக்கானல் வத்தலக்குண்டு ரோட்டில் தாமதமாக நடக்கும் பாலம் பணியால் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. கொடைக்கானல் சுற்றுலாத்தலமாக உள்ள நிலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன.
இச்சூழலில் சுற்றுலா தலத்தின் முக்கியமான ரோடாக வத்தலக்குண்டு ரோடு உள்ளது. ஓராண்டுக்கு முன் வாழைகிரி, ஊத்து இடையே இரு தரைப் பாலங்கள் கட்டுமான பணி நடக்கிறது. இப்பணிகள் முழுமை பெறாமல் அரைகுறை நிலையிலே உள்ளது. வளைவு பகுதியில் நடக்கும் பால பணி குறித்து எச்சரிக்கை பலகை அமைத்தும் அவை சேதமடைந்தது. தகரம் கொண்டு பாலங்கள் நடக்கும் பணியை அடைத்துள்ளதால் வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர். ஆண்டுதோறும் கொடைக்கானல் ரோடு வளர்ச்சி பணி செய்யப்பட்ட போதும் ஏனோ ரோடு மேம்பாடு அடையவில்லை. பாலம் பணி தாமதமாக நடக்கும் நிலையில் தினமும் இவ்விடத்தை கடக்கும் வாகன ஓட்டிகள் அவதியடையும் நிலை உள்ளது.