ADDED : மே 04, 2025 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாண்டிக்குடி: வாசனை, மலைத்தோட்ட பயிர்கள், பெரியகுளம் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் ,தமிழ்நாடு வேளாண் பல்கலை, மத்தியரசின் பாக்கு, வாசனை பயிர்கள் மேம்பாட்டு இயக்ககம் கோழிக்கோடு சார்பில் இஞ்சி சாகுபடி பயிற்சி, இடுபொருட்கள் வழங்கும் விழா தாண்டிக்குடி காபி ஆராய்ச்சி நிலையத்தில் நடந்தது.
காபி ஆராய்ச்சி நிலைய துணை இயக்குனர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். வாரிய உறுப்பினர் ரவிச்சந்திரன் பேசினார்.
பெரியகுளம் விஞ்ஞானி பிரபு, இயற்கை வள மேலாண்மை துறை உதவி பேராசிரியர் செண்பகவள்ளி கலந்து கொண்டனர். ரூ. 10 லட்சம் மதிப்பிலான இஞ்சி உள்ளிட்ட இடு பொருட்கள் வழங்கப்பட்டன.

