தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பட்டுக்கூடு விவசாயிகளுக்கு தரமான ‘மவுண்டேஜ் வலை’ வழங்க கோரிக்கை

பட்டுக்கூடு விவசாயிகளுக்கு தரமான ‘மவுண்டேஜ் வலை’ வழங்க கோரிக்கை

பட்டுக்கூடு விவசாயிகளுக்கு தரமான ‘மவுண்டேஜ் வலை’ வழங்க கோரிக்கை


ADDED : செப் 14, 2026 08:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2026 08:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி, செப். 15- – தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நல சங்கம் சார்பில், ‘தரமான பாலிமர் மவுண்டேஜ் மஞ்சள் வலை மானிய திட்டத்தில் வழங்க 400 கிராம் எடைக்கு மேல் உள்ள வலைகளை கொள்முதல் செய்ய டெண்டர் கோர வேண்டும்.’ என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு பட்டுக்கூடு விவசாயிகள் சங்கம் சார்பில் 2025- – 2026 மானிய விலையில் வழங்க உள்ள பாலிமர் மவுண்டேஜ் மஞ்சள் வலை தரமானதாக 400 கிராம் எடைக்கு மேல் உள்ளவற்றை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வழங்க மத்திய பட்டு வாரியம் தொழில்நுட்ப இயக்குனருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: மத்திய, மாநில மானிய திட்டத்தில் பட்டுக்கூடு விவசாயிகளுக்கு வழங்குவதற்கு என பாலிமர் மவுண்டேஜ் மஞ்சள் வலை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் ஆக.,25 வெளியிடப்பட்டது. அதில் 350 கிராம் அளவில் 5 கிராம் கூடுதல் குறைவாக இருக்கலாம் என 2 லட்சத்து 9 ஆயிரத்து 616 வலை வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.

இத்தரத்தில் வலைகள் கொள்முதல் செய்தால் பட்டுக்கூடு கட்ட புழுக்கள் துவங்கியவுடன் பட்டுகூடு நூல் வீணாகி விடும். இரட்டைக் கூடுகள் கட்டும் நிலை ஏற்படும். இதனால் பட்டுக் கூடுகளின் தரம் குறையும். எனவே 400 கிராம் எடைக்கு மேல் தரமான வலைகளை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வழங்கமாறு கேட்டுக்கொள்கிறோம். கடந்தாண்டில் இந்த அளவில் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டபோது வலைகள் தரம் இல்லை என்பது குறித்தும், கடிதம் வாயிலாக தெரிவித்து இருந்தோம் என, மாநிலச் செயலாளர் செல்வராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us