/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விவசாயத்திற்கான மும்முனை மின் வினியோகத்தில் தேவை நேரம் மாற்றம்:..
/
விவசாயத்திற்கான மும்முனை மின் வினியோகத்தில் தேவை நேரம் மாற்றம்:..
விவசாயத்திற்கான மும்முனை மின் வினியோகத்தில் தேவை நேரம் மாற்றம்:..
விவசாயத்திற்கான மும்முனை மின் வினியோகத்தில் தேவை நேரம் மாற்றம்:..
UPDATED : மார் 07, 2024 06:40 AM
ADDED : மார் 06, 2024 06:28 AM

மாவட்டத்தில் விவசாயமே முக்கிய தொழிலாக உள்ளது. சில இடங்களில் மட்டுமே வாய்க்கால் பாசனம் மூலம் விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். முக்கால்வாசி நிலங்கள் கிணற்று பாசனம் மூலம் பாசன வசதி பெறுகிறது. 2023ல் பெய்த மழையால் கிணறுகளில் தண்ணீர் ஓரளவிற்கு உள்ளது. பல பகுதிகளில் பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் கிணறுகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. பகல் வேளையில் காலை 9:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை கிணறுகளுக்கு மும்முனை இணைப்பு மின்சாரம் வழங்கப்படுகிறது.
இதன் மூலம் நீர் பாய்ச்சும் போது சுட்டெரிக்கும் வெயில் காரணமாக பாதி தண்ணீர் வாய்க்காலிலே வற்றி விடுகிறது. இதனால் பயிர்களுக்கு நீர் பாய்ச்ச அதிக நேரம் செலவாகிறது. தண்ணீரும் அதிகம் தேவைப்படுகிறது.
இந்த நேரத்தை மாற்றி முன்பு இருந்தது போல் காலை 6:00 மணிக்கு மும்முனை இணைப்பு சப்ளை கொடுத்தால் குளிர்ந்த நேரத்தில் நிலங்களுக்கு வேகமாக நீர் பாய்ச்ச முடியும் .அதே நேரத்தில் தண்ணீரும் மிச்சப்படும் என்கின்றனர் விவசாயிகள்.