/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஜல்லிக்கட்டு ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்ய வலியுறுத்தல்
/
ஜல்லிக்கட்டு ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்ய வலியுறுத்தல்
ஜல்லிக்கட்டு ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்ய வலியுறுத்தல்
ஜல்லிக்கட்டு ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்ய வலியுறுத்தல்
ADDED : ஜன 23, 2025 04:45 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஜல்லிகட்டு போட்டிகளுக்கு ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்ய தமிழ்நாடு பாரம்பரிய ஜல்லிக்கட்டு பேரவை வலியுறுத்தியுள்ளது.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு பாரம்பரிய ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடந்த கவனஈர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து அதன் மாநில தலைவர் செந்தில்குமார் கூறியதாவது: ஜல்லிகட்டு ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்ய மனு அளித்தும் பழநி, நெய்க்காரன்பட்டியில் ஆன்லைன் டோக்கன் முறையை மாவட்ட நிர்வாகம் நடைமுறைப்படுத்தி உள்ளது.
இதை முற்றிலும் ரத்து செய்து பாரம்பரிய முறைப்படி விழா கமிட்டி மூலம் டோக்கன் விநியோகம் செய்ய வேண்டும். டோக்கன் முறை தொடர்ந்தால் மாட்டின் உரிமையாளர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.