/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க... கோரிக்கை; முன் ஏற்பாடு பணிகளை துவக்க விவசாயிகள் வலியுறுத்தல்

ADDED : பிப் 23, 2026 06:08 AM

இம்மாவட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், பழநி உள்ளிட்ட 3 நகராட்சிகள், 23 பேரூராட்சிகள், 306 ஊராட்சிகள் என, பறந்து விரிந்த மாவட்டமாக உள்ளது. கொடைக்கானல், தாண்டிக்குடி, ஒட்டன்சத்திரம், ஆர்.கோம்பை உள்ளிட்ட மலைப் பகுதிகள் இருந்தாலும் மாவட்டத்தின் மற்ற பெரும்பாலான பகுதிகள் வறட்சி பாதித்த பகுதிகளாகவே இன்று வரை உள்ளன. நடப்பாண்டில் போதிய பருவ மழை இல்லாததால் ஆறு, குளங்கள், கிணறுகள், 'போர்வெல்'களில் நீர்வரத்து 99 சதவீதம் இல்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது.
மாவட்டத்தில் பெரும்பாலான நிலங்கள், மழையை எதிர்பார்த்து விவசாயம் செய்யக்கூடிய மானாவாரி நிலங்களாகவே உள்ளன. போதிய மலை இல்லாத நிலையில், நிலக்கடலை, எள், கம்பு, சோளம் உள்ளிட்ட மானாவாரி விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயிகள் போதிய மகசூல் இன்றி தவிப்பில் உள்ளனர்.
அதேபோல் விவசாயத்திற்கு அடுத்தப்படியாக கால்நடை வளர்ப்பை மட்டுமே 90 சதவீத விவசாயிகள் பின்பற்றி வருகின்றனர். அந்த கால்நடைகளும் போதிய தீவனம் இன்றி வாடுவதால், விவசாயிகள் கூடுதலான விலை கொடுத்து தீவனங்களை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். விவசாயிகள் கால்நடைகளை குறைந்த விலைக்கு விற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
குஜிலியம்பாறை வேடசந்துார் உள்ளிட்ட தாலுகா பகுதிகளில் தற்போதே கடும் வறட்சி நீடிக்கிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் குறிப்பாக சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது. நடப்பாண்டில் எந்த குளங்களிலும், 'போர்வெல்'களிலும், கிணறுகளிலும் நீர்வரத்து இல்லை.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தும், ஒரு சில இடங்களில் முற்றிலும் வறண்டு ஈர நெடி கூட இன்றி மண் காய்ந்துள்ளதை பார்கக முடிகிறது.
இதனால் விவசாயத் தொழில் நசுந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்ட மக்களின் நலன் கருதி, திண்டுக்கல் மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்கவும், போதிய முன்னேற்பாடு பணிகளை செயல்படுத்திடவும், தமிழக அரசு விரைந்து முன்வர வேண்டும்.