/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாசித் திருவிழாவில் நாளை திருக்கல்யாண உற்ஸவம்
/
மாசித் திருவிழாவில் நாளை திருக்கல்யாண உற்ஸவம்
ADDED : பிப் 23, 2026 05:36 AM
பழநி: பழநி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவில் நாளை திருக்கல்யாண உற்ஸவம் விமர்சையாக நடக்க உள்ளது.
பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட இக்கோயில் பழநி கிழக்கு ரத வீதியில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசித் திருவிழா விமர்சையாக நடக்கும்.
21 நாட்கள் நடக்கும் இத்திருவிழா பிப்.6 இரவு முகூர்த்தக்கால் நடுதலுடன் திருவிழா துவங்கியது. பிப்.10ல் திருக்கம்பத்திற்கு அரிவாள் எடுத்துக் கொடுத்தல், அலங்கரித்தல் நடைபெறும். அலங்கரிக்கப்பட்ட கம்பம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மாரியம்மன் கோயில் முன் கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. அன்றிரவு குமாரசத்திரம் அழகுநாச்சி அம்மன் கோயில் அடிவாரம் அழகுநாச்சி அம்மன் கோயில் சாற்றுதல் நடந்தது. பக்தர்கள் பால், மஞ்சள் நீரில் கம்பத்திற்கு அபிஷேகம் செய்து வழிபாடு நேர்த்திக்கடன் செய்து வருகின்றனர்.
பிப்.17ல் கொடி கம்பத்தில் கொடி எற்றும் நிகழ்ச்சி இரவு நடந்தது. கோயில் முன் உள்ள திருக்கம்பத்தில் வைக்கப்பட்டது. நேற்று முதல் பத்தர்கள் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திவருகின்றனர். தங்கமயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. பிப்.18ல் அடிவாரம், குமாரசமுத்திரம் அழகு நாச்சியம்மன் கோயில்களில் காலை திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. நாளை (பிப்.24,ல்) மாரியம்மனுக்கு திருக்கல்யாணம் உற்ஸவமும், பிப்.25ல் தேரோட்டமும் நடக்க உள்ளது.
திருவிழா நாட்களில் வெள்ளி யானை, தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் மாரியம்மன் ரத வீதி உலா நடக்கும். பிப்.26ல் கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறும்.

