ADDED : ஆக 05, 2025 05:10 AM

ரெட்டியார்சத்திரம் : ரெட்டியார்சத்திரம் கதிர்நரசிங்க பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்திற்காக அமைக்கப்பட்ட யாகசாலை கட்டமைப்புகள் தினமலர் செய்தியால் அகற்றப்பட்டது.
கொத்தபுள்ளி அருகே திண்டுக்கல்-பழநி ரோட்டில் செங்கமலவல்லி சமேத கதிர் நரசிங்க பெருமாள் கோயில் உள்ளது. கோயிலின் முன் பகுதியில் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவது வழக்கமாக இருந்தது.
இதற்காக ஏலதாரர் மூலம் கட்டண வசூலும் நடைமுறையில் உள்ளது. ஏப். 4ல் கும்பாபிஷேகம் நடந்ததும் கோயில் முன்புள்ள யாகசாலை கட்டமைப்புகள் 3 மாதங்கள் கடந்தும் அகற்றவில்லை. இவை சிதிலமடைந்து கிடந்தன. பக்தர்களின் வாகனங்கள், வேலம்பட்டி ரோடு, திண்டுக்கல்-பழநி ரோடு உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பற்ற நிலையில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இவற்றுக்கும் கட்டண வசூல் நடந்ததால் பக்தர்கள் பாதிப்படைந்தனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து அறநிலையத்துறை மூலம் கட்டமைப்புகள் அகற்றப்பட்டுள்ளது.

