/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்
/
கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 11, 2026 06:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: பல்கலை மானியக்குழு நிர்ணயித்த ரூ.57 ஆயிரத்து 800 ஊதியமாக வழங்க வேண்டும். 12 மாதங்கள் ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி , அனைத்து அரசு கலைக் கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது.
நேற்று 2ம் நாளாக திண்டுக்கல் எம்.வி.எம்., அரசினர் மகளிர் கலைக்கல்லுாரி நுழைவாயில் முன் கண்களில் கருப்புத் துணி கட்டி வாயில் முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்றும் 89 கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்ததால் மாணவி களுக்கான கற்பித்தல் பணிகள் பாதிக்கப்பட்டன.

