/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சுங்கச்சாவடி அகற்ற ஆர்ப்பாட்டம்
/
சுங்கச்சாவடி அகற்ற ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 07, 2024 06:24 AM

நத்தம்: நத்தம் பரளிபுதுாரில் புதிதாக திறக்கப்பட்ட சுங்கச்சாவடியை அகற்றக் கோரியும் கட்டண உயர்வை கண்டித்து அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நத்தம் பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா முன்பு நடந்த இதில் இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் வெள்ளைச்சாமி தலைமை தாங்கினார். காங்கிரஸ் தெற்கு வட்டார தலைவர் செல்வம், மார்க்சிஸ்ட் தாலுகா செயலாளர் சின்னகருப்பன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் தமிழ்முகம், மனிதநேய மக்கள் கட்சி நகர தலைவர் சித்திக் முன்னிலை வகித்தனர். மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் அப்துல் அகது,காங்கிரஸ் நகர தலைவர் முகமது அலி, வடக்கு வட்டார தலைவர் பழனியப்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தெற்கு ஒன்றிய செயலாளர் மயில்ராஜ் கலந்து கொண்டனர்.

