நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி; தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.20,000 வழங்க வேண்டும், பெண்ஷன் தொகை மாதம் ரூ.ஒன்பதாயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பழநி ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ .,சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட துணை தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அருள் செல்வன், தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மாவட்ட அமைப்பாளர் முத்துசாமி கலந்து கொண்டனர்.