ADDED : செப் 26, 2026 10:23 PM
அ நிறம் | அளவு
நத்தம், செப்.27-
நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக வட்டார மருத்துவ அலுவலர் குழு, என்.பி.ஆர்., கல்விக்குழுமம் இணைந்து கல்லுாரி வளாகம், மாணவர்கள் விடுதிகளில் கொசுக்கள் ஒழிப்பு பணி, முதிர் கொசுக்களை அழிக்க புகை மருந்து அடித்தல் பணி மேற்கொள்ளப்பட்டது.
விடுதிகள், கல்லுாரிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து குளோரினேசன் செய்யப்பட்டது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள் முன்னிலையில் இப்பணிகள் நடந்தன.
