UPDATED : செப் 26, 2026 10:16 PM
ADDED : செப் 26, 2026 10:13 PM
ஒட்டன்சத்திரம்:உலக இருதய நாள் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு இரட்டையர் இறகுப்பந்து போட்டி ஒட்டன்சத்திரத்தில் நடந்தது. இந்திய மருத்துவக் கழக ஒட்டன்சத்திரம் கிளை தலைவர் டாக்டர் முத்துச்சாமி போட்டியை தொடங்கி வைத்தார்.
இந்த வருட குறிக்கோளான 'இதய நோய் நம் கண்ணெதிரே மறைந்திருக்கலாம், ஒரு துடிப்பையும் தவற விடாதீர்கள்' என்பது குறித்து விளையாட்டு வீரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
போட்டியில் சேக்பரித் - வெங்கடேசன் இணை முதல் பரிசையும், கவுதம் விஸ்வநாத் - ரெஸ்மி இரண்டாம் பரிசையும், திருப்பதி - கார்த்திக் மூன்றாம் பரிசையும் பெற்றனர். சீனியர் பிரிவில் வெற்றி பெற்ற திலீப்குமார், கணேஷ்குமார், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், டேனியல் ஆகியோருக்கு திண்டுக்கல் மாவட்ட பொது மருத்துவர்கள் சங்கத் தலைவர் ஆசைத்தம்பி பரிசுகள் வழங்கினார்.
