தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ திண்டுக்கல்லில் இருவருக்கு டெங்கு

 திண்டுக்கல்லில் இருவருக்கு டெங்கு

 திண்டுக்கல்லில் இருவருக்கு டெங்கு


ADDED : செப் 22, 2026 01:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2026 01:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர காய்ச்சல் அறிகுறியுடன் 18 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் பரிசோதனையில் இருவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதியானது.

திண்டுக்கல் மாவட்டத்தில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பள்ளமான இடங்களில் மழைநீர் தேங்குகிறது. இது மழைக்கால நோய்கள், டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்திக்கு வழிவகுக்கிறது. சுகாதார சிக்கல்களை தவிர்க்க வீடுகள், சுற்றுப்புறங்கள், வணிக நிறுவனங்கள், பொது இடங்களில் தண்ணீர் தேங்காதவாறு கவனமுடன் செயல்பட மாநகராட்சி, மாவட்ட சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டு உள்ளது.

இதற்கிடையில் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்பால் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக 32 படுக்கைகள் வசதியுடன் காய்ச்சலுக்கென தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் காய்ச்சல், தீவிர காய்ச்சல் அறிகுறியுடன் இம்மருத்துவமனையில் 10 பெண்கள், 8 ஆண்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். மருத்துவ பரிசோதனை முடிவில் இரு ஆண்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதியானது. அவர்கள் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். மேலும் 6 பேருக்கு சளி, ரத்த மாதிரி பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மழைக்கு பிறகு ஏற்பட்டு வரும் காய்ச்சல் டெங்குவின் அறிகுறியா என பொதுமக்களிடம் அச்சம் உள்ளது. எனவே காய்ச்சல் பாதிப்பை குறைப்பதற்கு சுகாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். காய்ச்சல் பாதிப்பு இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்திட ஏற்பாடு செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us