UPDATED : செப் 21, 2026 09:53 PM
ADDED : செப் 21, 2026 09:42 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. திண்டுக்கல் கரூர் ரோடு, பாலகிருஷ்ணாபுரம் சுரங்கப்பாதையில் மழைநீர் வெள்ளமென தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நகரின் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.
இதற்கிடையில் கனமழை நேரத்தில் ஏற்பட்ட மின்னல் தாக்கியதில் உயர் மின்அழுத்தம் ஏற்பட்டு என்.எஸ்.நகர், என்.ஜி.ஓ., காலனி மற்றும் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதி வீடுகளில் டி.வி., பிரிட்ஜ், மின்விசிறி, ஏ.சி., வாஷிங் மெஷின், ஹீட்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுதடைந்தன.
